விவசாயிகளின் கோரிக்கை குறித்து கலந்துரையாடப்படும் - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் 

By T Yuwaraj

07 Apr, 2022 | 08:34 PM
image

விவசாயிகளின் கோரிக்கை நியாயமானதா என்பது தொடர்பில்   கலந்துரையாட இருப்பதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார் 

கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் கீழ் இவ்வாண்டு மேற்கொள்ளப்படவுள்ள பயிர் செய்கையின் போது  தங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும்  தங்களுக்குரிய நீர் பங்கு வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து  குறிப்பிட்ட சில விவசாயிகள் இன்றைய தினம்  (07-04-2022) கிளிநொச்சி காக்கா கடைச் சந்தியில் இருந்து மாவட்ட செயலகம் வரை பேரணியாக சென்று மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரனிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர். 

இதனை அடுத்து கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மாவட்டத்தில் சிறுபோக பயிர்செய்கை கூட்டமானது துறை அதிகாரிகளின் ஆலோசனைகளின் படியும்  எங்களது அறிவுறுத்தல்களின்  படியும் விவசாயிகளின் ஒத்துழைப்போடும் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய மேற்கொள்ளப்படுகின்றன.

அதேபோல பயிர் செய்கை தொடர்பான தீர்மானங்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருந்தது. இதில் அதிருப்தி அடைந்தவர்களின் விடயங்கள் பெரிய அளவில் பிரஸ்தாபிக்காத காரணத்தினால் இன்றைய தினம் அவர்கள் கூடி வந்திருக்கின்றார்கள். 

இவர்களது கோரிக்கை நியாயமானது தானா என்பது தொடர்பில் கலந்துரையாட வேண்டியுள்ளதால் மீளவும் கூட்டத்தை கூட்டி ஆராய வேண்டியுள்ளது என மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசிலமைப்பின் 22 ஆம் திருத்தச் சட்டமூலம்...

2022-09-30 16:44:39
news-image

அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் இலவச...

2022-09-30 16:40:29
news-image

சுகாதாரத்துறை வீழ்ச்சியடையவில்லை - அமைச்சர் கெஹலிய

2022-09-30 16:31:29
news-image

வெகுவிரைவில் அரசாங்கத்தை கவிழ்ப்போம் - குமார...

2022-09-30 16:10:50
news-image

மிருகக்காட்சி சாலைக்கு இலவசமாக செல்ல அனுமதி...

2022-09-30 16:05:36
news-image

வடக்கு, கிழக்கு மக்களின் நிலங்களை தொல்பொருள்...

2022-09-30 16:30:11
news-image

தகவல் அறியும் ஆணைக்குழுவும் அழுத்தங்களை எதிர்...

2022-09-30 22:20:09
news-image

ஒக்டோபர் மாத இறுதியில் அரசியல் சுனாமி-...

2022-09-30 16:48:48
news-image

சவுக்கு மரங்களை வெட்டிக் கடத்த முற்பட்ட...

2022-09-30 16:45:32
news-image

யாழில் வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த வீடு உடைத்து...

2022-09-30 16:43:33
news-image

'ஹெல்பயர்' இசை நிகழ்வு - பெயரை...

2022-09-30 16:35:59
news-image

'தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை'...

2022-09-30 16:38:33