நெருக்கடிக்கு தீர்வுகாண ஆளும், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் - ஜீவன் தொண்டமான்

Published By: Digital Desk 3

07 Apr, 2022 | 07:16 PM
image

(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வசீம்)

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு ஆளும் எதிர்க்கட்சி என்று பார்க்காமல் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் நாங்கள் இந்த சபையில் இருந்து பயன் இல்லை. அத்துடன் எனது ராஜினாமா தொடர்பாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு காலம் வரும்போது பதில் வழங்குவேன் என ஆளும் கட்சி உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (7) இரண்டாவது நாளாக இடம்பெற்பட்ட நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே   இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வுகாண்பதற்கு தேவையான ஆலோசனைகளை யாரும் முன்வைப்பதில்லை. மக்களுக்கு பாராளுமன்றத்துக்கு வந்து கருத்து தெரிவிக்க முடியாது என்பதற்காக அவர்கள் வீதிக்கிறங்கி போராடுகின்றனர். 

ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களின் கோஷத்தை சபைக்குள் வந்து கோஷம் எழுப்புவதும் பதாதைகளை காட்சிப்படுத்துவது அர்த்தமில்லை.

மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தேவையான விடயங்களை பேசுவதற்கு பதிலாக வேறு விடயங்களையே பேசிக்கொண்டிருக்கின்றனர்.

அத்துடன் நாடு பாரிய கடன் சுமையை எதிர்கொண்டுள்ளது. கடன் மீள செலுத்தவேண்டி இருக்கின்றது. அதனை செலுத்துவது எப்படி? பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பது எப்படி என்பது தொடர்பாகவே பேசப்படவேண்டும். 

நாட்டில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேறு நடவடிக்கைகளால் எமது நாட்டின் நன்மதிப்பு உலக மட்டத்தில் பாதிக்கப்பட்டிருக்கின்றது.

கடன் செலுத்துவதற்கு கடன் பெறும் நிலையே இருக்கின்றது. கடன் மீள் செலுத்த வேலைத்திட்டம் ஒன்றை செய்துகொள்ள முடியாமல் போயிருக்கின்றது. 

மேலும் மக்கள் வீதிக்கிறங்கி கோத்தா வீட்டுக்கு போ என்ற கோரிக்கை பாராளுமன்றத்தில் இருக்கும் அனைவருக்கும் தெரிவிக்கப்படும் கோரிக்கையாகும். நாங்கள் எமது கடமையை செய்ய தவறிவிட்டோம். அதனால்தான் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண பொதுவான இணக்கப்பாட்டுக்கு நாங்கள் அனைவரும் வரவேண்டும். 

ஆளும் எதிர்க்கட்சி என்று பார்க்காமல் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும். அவ்வாறு இல்லாமல் நாங்கள் இந்த சபையில் இருந்து பயன் இல்லை.

நாட்டின் தற்போதைய நிலையில் மலையக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முதுகெலும்பு இருக்கின்றது என்பதை காட்டுவதற்கே நாங்கள் பதவி விலகினோம்.

மலையக மக்களுக்கு பல அபிவிருத்திகளை செய்திருக்கின்றோம். இன்னும் பல வாக்குறுதிகளை வழங்கி இருக்கின்றோம். என்றாலும் தற்போது அபிவிருத்தி சலுகை அரசியலில் இருக்க முடியாது். அதனால் கொள்கை அரசியலுக்கு மாறி ஆகவேண்டும். 

எனது இராஜினாமா தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. அதற்கான பதிலை காலம் வரும்போது தெரிவிப்பாேம். மக்கள் பக்கம் இருந்தே நாங்கள் தீர்மானம் ஒன்றை எடுத்தோம், எதிர்காலத்திலும் மக்களின் தீர்ப்பே எமது தீர்வாக இருக்கும். அதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடந்த 15 வருடங்களாக கல்விக் கல்லூரிகள்...

2025-02-15 12:16:54
news-image

கடவத்தையில் எரிந்த நிலையில் ஆணின் சடலம்...

2025-02-15 12:00:48
news-image

மினுவாங்கொடை துப்பாக்கிச் சூடு ; இருவர்...

2025-02-15 11:06:50
news-image

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

2025-02-15 10:58:37
news-image

எஹெலியகொடையில் பேரனால் தாக்கப்பட்டு தாத்தா உயிரிழப்பு!

2025-02-15 11:29:58
news-image

இலஞ்சம் பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர்...

2025-02-15 10:54:31
news-image

யாழுக்கு விஜயம் செய்தார் பிரதமர் ஹரிணி

2025-02-15 10:49:00
news-image

பதுளை - இராவண எல்ல வனப்பகுதியில்...

2025-02-15 10:35:05
news-image

உணவகத்தில் அடிதடி : யாழ். பொலிஸ்...

2025-02-15 09:59:37
news-image

பாணந்துறையில் பஸ் விபத்து ; நால்வர்...

2025-02-15 09:52:54
news-image

இந்து சமுத்திர மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர்...

2025-02-14 16:59:55
news-image

இன்றைய வானிலை

2025-02-15 06:03:24