பொலிஸார், இராணுவத்தினருக்கு எதிராக சமூக  வலைத்தளங்களில் காணொளி வெளியிட்டவர் கைது

Published By: Digital Desk 4

07 Apr, 2022 | 01:45 PM
image

பொலிஸார் மற்றும் இராணுவத்தினரை தாக்கி, அவர்களை கொலை செய்ய வேண்டும் என்று தெரிவித்து சமூகவலைத்தளங்களில் காணொளியை வெளியிட்ட சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர் 36 வயதான தலாவை நாகொடை பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் , பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிப்படுத்தப்பட்டு எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது :

மேற் குறிப்பிடப்பட்ட சந்தேகநபர் கடந்த 6 வருடகாலமாக போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பதோடு , அவரது பெற்றோரால் மனநல சிகிச்சை பெறுவதற்காக கராப்பிட்டிய மற்றும் முல்லேரியா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் , முழுமையான சிகிச்சையைப் பெறாமல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளவர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் பிறிதொரு குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு கதிர்காமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் அங்குணுகொலபெலஸ்ஸ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு , அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் சிகிச்சைகளுக்காக அவர் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை இவர் பல சந்தர்ப்பங்களில் பௌத்த மதகுமார்களைப் போன்ற ஆடையணிந்து பல இடங்களுக்குச் சென்றுள்ளார் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. நாகொட பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47