விஷாலின் 'லத்தி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

07 Apr, 2022 | 02:30 PM
image

'புரட்சித் தளபதி' நடிகர் விஷால் நடிப்பில் தயாராகி இருக்கும் 'லத்தி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் ஏ. வினோத் குமார் இயக்கத்தில் தயாராகியிருக்கும் முதல் திரைப்படம் 'லத்தி சார்ஜ்'. 

இந்தப் படத்தில் நடிகர் விஷால் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்திருக்கிறார், மூத்த நடிகர் பிரபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

Sunaina Movies, News, Photos, Age, Biography

பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர்ராஜா இசையமைத்திருக்கிறார். 

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகும் இந்த படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா ஆகியோர் இணைந்து ராணா புரொடக்சன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கிறார்கள்.

ஆக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த லத்தி திரைப்படத்தில் நடிகர் விஷால் பொலிஸாக நடித்திருக்கிறார். 

Vishal to play a cop again, in Laththi | Tamil Movie News - Times of India

அண்மையில் வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக்கில் இடது கையில் காயத்துடனும், வலது கையில் ஆக்ரோஷமாக காவல்துறையினரின் பாரம்பரிய ஆயுதமான லத்தி ஒன்றையும் பிடித்துக்கொண்டு பொருள் பொதிந்த பார்வையுடன் தோற்றமளிப்பது ரசிகர்களை கவர்ந்திருப்பதால் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு எதிர்பார்த்ததைவிட கூடுதலான வரவேற்பு கிடைத்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right