ஒமிக்ரோனுக்கு புதிய தடுப்பூசி ; ஆஸ்திரிய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

By T. Saranya

07 Apr, 2022 | 12:03 PM
image

ஆஸ்திரியா நாட்டில் ஒமிக்ரோன் உள்ளிட்ட சார்ஸ்-கோவ்-2 வகைகளுக்கு எதிராக புதிய தடுப்பூசியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஏற்கனவே தடுப்பூசி போட்டு நோய் எதிர்ப்புச்சக்தி பெறாதவர்களுக்கும் இந்த தடுப்பூசி பலன் அளிக்கும். 

வியன்னா மருத்துவ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசி, ஆர்.பி.டி. என்று அழைக்கப்படுகிற வைரசின் ஏற்பி பிணைப்பு களங்களை குறிவைக்கிறது. 

விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இந்த தடுப்பூசியை செலுத்தி பரிசோதித்ததில் இது நோய் எதிர்ப்புச்சக்தியை உருவாக்குவது தெரிய வந்துள்ளது.

இந்த நோய் எதிர்ப்புச்சக்தியானது, உடல் செல்களுக்குள் வைரசை நுழையவிடாமல் தடுக்கிறது. இதனால் தொற்று ஏற்படாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

போதுமான நிதி கிடைத்தால், ஒப்புதலுக்கு தேவையான முதல் மருத்துவ பரிசோதனைகள் இந்த ஆண்டு மேற்கொள்ளப்படலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்னர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right