அரசாங்கத்தின் புதிய சமூக ஊடக பிரச்சாரம்

By T. Saranya

07 Apr, 2022 | 03:29 PM
image

நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றார்கள்.

இந்நிலையில், அரசாங்கத்திற்கு எதிராக சமூக ஊடகங்களிலும் தங்களது எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

அந்த வகையில், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்த பேஸ்புக் சமூகதளத்தில் தேசிய கொடியுடன் தங்கள்  புகைப்படங்களை மாற்றும் முறை பிரபலமடைந்தது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து புதிய நடவடிக்கையாக சமூக ஊடகங்களில் ஒன்றான பேஸ்புக் பக்கத்தில் தங்கள் புகைப்படங்களை மாற்றியுள்ளனர்.

அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களால் பேஸ்புக் பக்கத்தில் பயன்படுத்தப்பட்ட தேசியக் கொடியுடன் அனைத்து தலைவர்களும் தங்கள் சுயவிவரப் புகைப்படத்தை மாற்றியுள்ளனர்.

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் ஏனைய தலைவர்கள் தமது பேஸ்புக் பதிவுகள் தொடர்பில் கருத்துகளை வெளியிடுவதற்கு பொதுமக்களை அனுமதித்துள்ள போதிலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது முகநூல் பதிவுகளில் பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதை கட்டுப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right