ஆஸ்திரேலியாவில் விபத்தில் இறந்த காதலனின் உயிரணு மூலம் காதலி ஒருவர் கருத்தரித்து குழந்தை பெற காத்துக்கொண்டிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவின் தெற்கு குவீன்ஸ்லாந்தில் உள்ள தூவேம்பா பகுதியை சேர்ந்த ஜோஷ்வா டேவிஸ், அய்லா கிரஸ்வெல் ஆகிய இருவரும் காதலித்து வந்தனர்.

இரு வீட்டாரின் சம்மதத்தோடு இவர்களுக்கு திருமணம் நடக்க இருந்தது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் ஜோஷ்வா சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து ஜோஷ்வாவின் நினைவு எப்போதும் இருக்க வேண்டும் என்று அய்லா, அவரது காதலன் உயிரணு மூலம் குழந்தை பெற முடிவு செய்தார்.

இரு வீட்டினரும் இதற்கு சம்மதம் தெரிவித்தனர். விளையாட்டு வீரர்கள் தங்களை உயிரணுக்களை அதற்கான வங்கியில் சேமித்து வைப்பது போல் ஜோஷ்வாவும் சேமித்து வைத்திருந்தார்.

எனவே அய்லா அவரது காதலன் உயிரணு மூலம் கருவை சுமக்க முடிவு செய்துள்ளதாகவும், அதன் மூலம் 3 குழந்தைகள் பெற உள்ளதாகவும் நீதிமன்றத்தில் முறையிட்டு அனுமதி பெற்றார்.

அதோடு ஜோஷ்வா உயிரணு கருத்தரிக்க உடைய சக்திகள் உடையதாக உள்ளது என்று மருத்துவர்கள் அதை பரிசோதித்து தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து தனது காதலன் உயிரணு மூலம் குழந்தை பெற காத்துக்கொண்டிருக்கிறார் அய்லா.