வசந்த கரன்னாகொடவின் ரிட் மனு ஜூன் மாதம் விசாரணை

Published By: Digital Desk 3

07 Apr, 2022 | 08:55 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய  சம்பவம் தொடர்பில், கொழும்பு,  ட்ரயல் அட்பார் விஷேட நீதிமன்றில் முன்னாள் கடற்படை தளபதி அத்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றப் பத்திரம் மீதான வழக்கின்  விசாரணைகளை நிறுத்துமாறு கோரி  அவரால்  ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில்  அம்மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் ஜூன் 27  ஆம் திகதி முன்னெடுக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று (6) தீர்மானித்தது.  

மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான  டி.எம். சமரகோன்  மற்றும் ஷஷி மகேந்ரன்  ஆகிய நீதிபதிகள் இதற்கான  தீர்மானத்தை நேற்று அறிவித்தனர்.

நேற்று இம்மனு விசாரணைக்கு வந்த போது, சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நரின் புள்ளே,  இந்த விவகாரத்தில் பல ஆவணங்களை சமர்ப்பிக்க அவகாசம் வழங்குமாறு கோரினார். அதற்கு அனுமதியளித்தே மனு இவ்வாறு  ஜூன் 27 வரை ஒத்தி வைக்கப்பட்டது.

முன்னதாக கடந்த 2020 ஜூன் 26 ஆம் திகதி  மேன் முறையீட்டு நீதிமன்றின் அப்போதைய தலைமை நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ், சோபித்த ராஜகருணா ஆகிய இருவர் கொண்ட நீதிபதிகள் குழாம் ரிட் மனு மீதான விசாரணைகள் நிறைவடையும் வரை செல்லுபடியாகும் வண்ணம் ட்ரயல் அட்பார் விஷேட நீதிமன்ற விசாரணைகளுக்கு  இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவு இன்றும் தொடர்கிறது.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய  சம்பவம் தொடர்பில்,  சிறப்பு மேல் நீதிமன்றம் முன்னெடுக்கும் விசாரணைகளை நிறுத்துமாறு கோரும், வசந்த கரன்னகொடவின் ரீட் மனுவில் சட்ட மா அதிபர் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார். சட்ட மா அதிபருக்காக நேற்று மன்றில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளே ஆஜரானார்.

மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவும், இடையீட்டு மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன மற்றும் நுவன் போப்பகே ஆகியோரும் ஆஜராகின்றனர்.

முன்னதாக தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக காட்டிக்கொண்டு, எந்த பயங்கரவாத செயல்களுடனும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புபடாத அப்பாவி சிவிலியன்களை கடத்திச் சென்று  இரகசியமாக தடுத்து வைத்து, கப்பம் பெற முயற்சித்து இறுதியில் அந்த 11 பேரையும்  கொலை செய்தமை தொடர்பில் மூவர் கொண்ட ட்ரயல் அட்பார்  விஷேட மேல் நீதிமன்றில்  வழக்கு தொடரப்பட்டுள்ளது.  

கொலை செய்ய சதி செய்தமை,  அதற்காக கடத்தியமை,  உடைமைகளை கொள்ளையிட்டமை,  பலாத்காரமாக சிறைப்படுத்தி வைத்திருந்தமை, காணாமல் ஆக்கியமை, அது தொடர்பிலான சாட்சியங்களை மறைத்தமை உள்ளிட்ட 667 குற்றச்சாட்டுக்கள் இந்த 14 பிரதிவாதிகளுக்கும் எதிராக சட்ட மா அதிபரால் முன்வைக்கப்பட்டுள்ளன. 

இதனை விசாரிக்க மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்னத்தின் தலைமையின் கீழ் மேல் நீதிமன்ற நீதிபதிகளான  அமல் ராஜகருணா, நவரத்ன மாரசிங்க ஆகியோரை உள்ளடக்கியதாக இந்த சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் பிரதம நீதியரசரால்  அமைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கொட்­டாஞ்­சேனை, தெஹி­வளை, வத்­தளை மற்றும் கட்­டு­நா­யக்க உள்­ளிட்ட பல பிர­தே­சங்­களில் பல்­வேறு உத்­தி­களை கையாண்டு இந்த கடத்­தல்கள் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக தெஹி­வ­ளையில் 2008.09.17 அன்று பெர்­னாண்டோ மாவத்­தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வர் என்­ப­வ­ரது வீட்டில் வைத்து அவரும் ரஜீவ நாக­நாதன், பிரதீப் விஸ்­வ­நாதன், தில­கேஸ்­வரன் ராம­லிங்கம், மொஹம்மட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாண­வர்­களும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர். 

இத­னை­விட கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த கஸ்­தூரி ஆரச்­சி­லாகே ஜோன் ரீட், அரிப்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன், கொட்­டாஞ்­சே­னையை சேர்ந்த அன்­டனி கஸ்­தூரி ஆராச்சி, திரு­கோ­ண­ம­லையை சேர்ந்த தியாக­ராஜா ஜெகன் உள்­ளிட்­டோரும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர். இவை அணைத்தும் கடந்த 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் திகதிக்கும் 2009 ஆம் ஆண்டு  செப்டம்பர் 21 ஆம் திகதிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளதாக சட்ட மா அதிபரின் குற்றப் பத்திரிகையில் சுட்டிக்கட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு கடத்தப்பட்ட அனைவரும் திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள இரகசிய வதை முகாமான கன்சைட் எனும்  தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையை குற்றப் புலனாய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இந்த விடயம் சர்வதேச அளவில் அவதானிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், முன்னாள் கடற்­படை தள­பதி வசந்த கரண்­ணா­கொடவின் பாதுகாப்பு உத்தியோகத்தரான சிறப்பு புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளராக கடமையாற்றியிருந்த லெப்டினன் கொமான்டர் சம்பத் முனசிங்க, கன்சைட் நிலத்தடி இரகசிய வதை முகாமின் பொறுப்பாளராக அப்போது இருந்த லெப்டினன் கொமாண்டர் தரத்தினை உடைய தற்போது கொமான்டர்ராக பதவி உயர்த்தப்பட்டுள்ள சுமித் ரணசிங்க, கடற்படை சிப்பாய் லக்ஷ்மன் உதயகுமார,  நலின் பிரசன்ன விக்ரமசூரிய, தம்மிக தர்மதாஸ , கித்சிரி மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவின் பணிப்பாளராகவும் கடற்படை ஊடகப் பேச்சாளராகவும் அப்போது பதவி வகித்த தற்போதைய ஓய்வுபெற்ற ரியர் அத்மிரால்  டி.கே.பி. தஸநாயக்க, கடற்படை வீரர்களான கஸ்தூரிகே காமினி, அருணதுஷார மெண்டிஸ், சஞ்ஜீவ பிரசாத் திலங்க சேனராத்ன, அண்னச்சி எனப்படும் உபுல் சமிந்த,  ஹெட்டி ஹெந்தி,  என்டன் பெர்ணான்டோ, சம்பத் ஜனக குமார,   லெப்.கொமாண்டர் ஹெட்டி ஆரச்சி விளக்கமறியலில் ஆகியோர் கைதாகி தற்போது  பிணையில் உள்ளனர். 

முன்னாள் கடற்படை தளபதியை கைது செய்ய உயர் நீதிமன்றம் தடை விதித்த நிலையில் அவர் இவ்வழக்கின் 16 ஆவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார். 17 ஆவது சந்தேக நபராக கடற்படை சிப்பாய் அலுத்கெதர உப்புல் பண்டார  கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் 17 ஆவது சந்தேக நபரான கடற்படை சிப்பாய் அலுத்கெதர உப்புல் பண்டார உள்ளிட்ட மூவர் அரச சாட்சியாக பயன்படுத்தப்படவுள்ளனர். அளுத் கெதர உபுல் பண்டாரவே  கன்சைட் முகாமில் குறித்த கடத்தப்பட்டவர்கள் இருந்த போது வீட்டாருடன் தொலைபேசியில் தொடர்புகொள்ள உதவியதாக விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதனைவிட லக்ஷ்மன் உதயகுமார மற்றும் தம்மிக தர்மதாஸ ஆகிய இரு கடற்படை உளவுப் பிரிவின் உத்தியோகத்தர்களையும் அரச சாட்சியாக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, சிறப்பு புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளராக கடமையாற்றியிருந்த லெப்டினன் கொமான்டர் சம்பத் முனசிங்க, கன்சைட் நிலத்தடி இரகசிய வதை முகாமின் பொறுப்பாளராக அப்போது இருந்த லெப்டினன் கொமாண்டர் தரத்தினை உடைய தற்போது கொமான்டர் ராக பதவி உயர்த்தப்பட்டுள்ள சுமித் ரணசிங்க, கடற்படை புலனாய்வுப் பிரிவின் நலின் பிரசன்ன விக்ரமசூரிய,கித்சிரி மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவின் பணிப்பாளராகவும் கடற்படை ஊடகப் பேச்சாளராகவும் அப்போது பதவி வகித்த ரியர் அத்மிரால்  டி.கே.பி. தஸநாயக்க, கடற்படை வீரர்களான கஸ்தூரிகே காமினி, அருணதுஷார மெண்டிஸ்   மற்றும் நேவி சம்பத் எனும் லெப்.கொமாண்டர் ஹெட்டி ஆரச்சி,சஞ்ஜீவ பிரசாத் திலங்க சேனராத்ன, அண்னச்சி எனபப்டும் உபுல் சமிந்த,  ஹெட்டி ஹெந்தி,  என்டன் பெர்ணான்டோ, சம்பத் ஜனக குமார ஆகிய 14 பேர் இந்த சிறப்பு மேல் நீதிமன்ற வழக்கில்  பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'மனித உரிமை மீறல் குற்றவாளிகளை சர்வதேசநீதிமன்றத்திற்கு...

2025-03-25 10:41:14
news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்நீதிமன்றில்...

2025-03-25 10:23:00
news-image

சம்மாந்துறையில் மனித பாவனைக்குதவாத குளிர்பானம் கைப்பற்றல்...

2025-03-25 10:23:54
news-image

நாட்டின் பல பகுதிகளில் மிதமான நிலையில்...

2025-03-25 10:03:41
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு : மற்றொரு...

2025-03-25 09:34:05
news-image

ஐரோப்பா செல்லும் நோக்கில் சட்டவிரோதமாக இலங்கைக்குள்...

2025-03-25 09:24:21
news-image

பொறுப்புக்கூறலை நோக்கிய முக்கியமான நடவடிக்கை :...

2025-03-25 09:29:20
news-image

இன்றைய வானிலை

2025-03-25 06:12:51
news-image

ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக...

2025-03-24 20:02:33
news-image

இந்திய பிரதமருடன் அரசாங்கம் செய்துகொள்ள இருக்கும்...

2025-03-24 20:22:23
news-image

ஐ.நா.வில் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை பிரித்தானிய...

2025-03-24 19:59:17
news-image

2 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்...

2025-03-24 20:20:30