வன்முறையாக மாற்றப்படும் ஆர்ப்பாட்டங்கள் அவற்றின் இலக்கைத் திசைதிருப்பிவிடும் -இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை

07 Apr, 2022 | 06:52 AM
image

(நா.தனுஜா)

வன்முறையாக மாற்றப்படும் ஆர்ப்பாட்டங்கள், அதற்கான உண்மை இலக்கையும் அமைதியான முறையில் கருத்துக்களை வெளியிடுவதற்கான நோக்கத்தையும் திசைதிருப்பும் அதேவேளை, கருத்துக்களின் வெளிப்பாட்டை அடக்குவதற்கு விரும்புபவர்களின் கைகளை மேலும் பலப்படுத்தும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

அதேவேளை மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யக்கூடியவாறான தீர்வுகளை வழங்குவதன் மூலமே தற்போது நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களை முடிவிற்குக்கொண்டுவரமுடியும் என்றும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

இவ்விடயம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:  

 

அண்மையில் ஆர்ப்பாட்டக்காரர்களால்  சில தனிநபர்களின் சொத்துக்கள் இலக்குவைக்கப்பட்டு, அவர்களது வீடுகள் உள்ளிட்ட சொத்துக்களுக்கு சேதமேற்படுத்தப்பட்டமையின் விளைவாக சில ஆர்ப்பாட்டங்கள் வன்முறைக்கு வழிவகுத்திருப்பதை அவதானிக்கமுடிகின்றது. 

அத்தகைய செயற்பாடுகள் குற்றம் என்பதுடன், அவ்வாறான வன்முறைகள் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்பவர்கள்மீது நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்படக்கூடிய வாய்ப்புக்களும் காணப்படுகின்றன. 

எனவே அத்தகைய குற்றச்செயல்களை நாம் வன்மையாகக் கண்டிக்கும் அதேவேளை, அமைதியாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோரின் உரிமைகளைப் பாதுகாக்குமாறும் வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக உரிய சட்டநடவடிக்கை எடுக்குமாறும் உரிய அதிகாரிகளை வலியுறுத்துகின்றோம்.

 சட்டத்தரணிகள் சங்கமானது அமைதியாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கும், தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்குமான மக்களின் உரிமைக்கு ஆதாரவாகவே எப்போதும் செயற்பட்டிருக்கின்றது. 

அந்த உரிமைக்கு மதிப்பளிக்குமாறு பல்வேறு சந்தர்ப்பங்களிலும் உரிய அதிகாரிகளை வலியுறுத்தியதற்கு அப்பால், ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டமைக்காக நியாயமற்ற முறையில் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களின் சார்பில் சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்கள் நீதிமன்றில் ஆஜராகியிருக்கின்றார்கள்.

 வன்முறையாக மாற்றப்படும் ஆர்ப்பாட்டங்கள், அதற்கான உண்மை இலக்கையும் அமைதியான முறையில் கருத்துக்களை வெளியிடுவதற்கான நோக்கத்தையும் திசைதிருப்பும் அதேவேளை, கருத்துக்களின் வெளிப்பாட்டை அடக்குவதற்கு விரும்புபவர்களின் கைகளை மேலும் பலப்படுத்தும். 

எனவே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள் அந்த ஆர்ப்பாட்டங்களை அமைதியான முறையில் முன்னெடுப்பதில் கரிசனையுடன் இருப்பதுடன் ஆர்ப்பாட்டத்தின் மத்தியில் வன்முறைகளை விதைப்பதற்கோ அல்லது அமைதியின்மையைத் தோற்றுவிப்பதற்கோ முற்படுபவர்கள் குறித்து அவதானத்துடனும் இருக்கவேண்டும்.

அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகாலநிலை, சமூகவலைத்தளங்கள் முடக்கப்பட்டமை, மக்களின் கோரிக்கைகளுக்கான ஏற்புடைய தீர்வுகளை வழங்குவதில் தோல்வியடைந்தமை என்பன ஆர்ப்பாட்டங்கள் மேலும் மூர்க்கத்தனமானவையாக மாறுவதற்கு வழிவகுத்துள்ளன. 

எனவே மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யக்கூடியவாறான தீர்வுகளை வழங்குவதன் மூலமே தற்போது நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களை முடிவிற்குக்கொண்டுவரமுடியும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பூகோள அரசியல் போக்குகள், பொருளாதார நெருக்கடியை...

2022-09-29 19:25:15
news-image

கொழும்பில் திறந்து வைக்கப்பட்டுள்ள புதிய அமெரிக்க...

2022-09-29 17:36:50
news-image

ஆசிரியர் தினத்திற்கு சகோதரன் பணம் செலுத்தாமையால்...

2022-09-29 17:27:36
news-image

அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமையின் எதிரொலி :...

2022-09-29 16:55:28
news-image

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 1.5 மில்லியன்...

2022-09-29 16:29:35
news-image

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக யாழில் பேரணி

2022-09-29 16:11:16
news-image

முகநூல் காதல் ; காதலியின் புதிய...

2022-09-29 16:14:23
news-image

சனத் நிஷாந்தவுக்கு எதிராக குற்ற பகிர்வு...

2022-09-29 15:56:10
news-image

மஹிந்த தலைமையில் நவராத்திரி பூஜை :...

2022-09-29 16:07:37
news-image

நாடு வங்குரோத்து நிலையை அடைந்து விட்டதாக...

2022-09-29 15:04:27
news-image

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை...

2022-09-29 14:07:25
news-image

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து...

2022-09-29 13:06:34