ஜனாதிபதி பதவி விலகினால் மட்டுமே தீர்வு : பதவி விலகும் வரை மக்கள் போராட்டம் தொடரும் - எதிர்க்கட்சிகள் சபையில் வலியுறுத்து

07 Apr, 2022 | 06:42 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டு மக்கள் இன்று ஜனாதிபதியை வீட்டுக்கு செல்ல வலியுறுத்துகின்றனர். இது ஜனநாயக நாடாக இருந்தால் மக்களின் குரலுக்கு செவிமடுத்து ஜனாதிபதி பதவி விலக வேண்டும். 

இல்லையேல் ஜனாதிபதி பதவி விலகும் வரையில் மக்களின் போராட்டம் தொடரும் என பாராளுமன்றத்தை பிரதிநித்துவப்படுத்தும் பிரதான எதிர்க்கட்சிகள் சபையில் வலியுறுத்தினர்.

பாராளுமன்றம் நேற்று புதன்கிழமை கூடிய வேளையில், நாட்டின் நெருக்கடி நிலைமையில் மக்களின் போராட்டத்தை அரசாங்கம் செவிமடுக்க வேண்டும் எனவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதன்போது கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற  உறுப்பினர் நளின் பண்டார :- 

ராஜபக்ஷவினரை ஒட்டுமொத்தமாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும். கோட்டா வீட்டுக்கு போ என்ற கோசம் நாட்டில் பலமடைந்துள்ளது என்றால் அதற்கு ராஜபக்ஷவினரின் பலவீனமும், அரசாங்கத்தின் பலவீனமும், ஜனநாயகத்திற்கு எதிராக அடக்குமுறையுமே நாட்டின் இன்றைய அராஜக நிலைமைக்கு காரணமாகும். 

இதுவரை எந்தவொரு ஜனாதிபதியும் சந்திக்காத மக்கள் எதிர்ப்பை கோட்டாபய ராஜபக் ஷ எதிர்கொண்டுள்ளார். இன்று ராஜபக் ஷவினர் நாட்டில் இருந்து தப்பித்து செல்ல முயற்சிக்கின்றனர். இதற்கு இடமளிக்க முடியாது. 

மக்கள் சொத்தை கொள்ளையடித்து நாட்டை விட்டு தப்பித்து செல்ல நாம் இடமளிக்க மாட்டோம். கோட்டாபய ராஜபக் ஷ ஜனாதிபதியாக இருக்கும் வரையில் நாட்டின் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. கோட்டாபயவே ஆட்சியை விட்டு வெளியேறும் நிலைமை உருவாகும் என்றார்.

சபையில் உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் கூறுகையில்,

நாட்டின் எரிபொருள் இல்லை, உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, இளைஞர்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர். இதற்கு அரசாங்கமே காரணமாகும். அவர்கள் இன்று அமைச்சுப்பதவிகளை துறந்துள்ளனர். அப்படியென்றால் இவர்களினால் ஆட்சியை கொண்டு நடத்த முடியாது என்பதே அதன் வெளிப்பாடாகும். 

அப்படியென்றால் மக்களின் ஆணையை கருத்தில் கொண்டு அதற்கு செவி மடுத்து ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவிவிலக வேண்டும். நீங்களே இந்த நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியுள்ளீர்கள். இப்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ பதவி விலக வேண்டும் என்பதே மக்களின் குரலாக உள்ளது. 

ஜனாதிபதி பதவி விலகினால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது அரசியல் அமைப்பில் உள்ளது. ஆனால் ஜனாதிபதி பதவி விலகும் வரையில் மக்களின் போராட்டம் தொடரும். நாட்டு மக்கள் இன்று ஜனாதிபதியை வீட்டுக்கு செல்ல வலியுறுத்துகின்றனர். இது ஜனநாயக நாடாக இருந்தால் மக்களின் குரலுக்கு செவிமடுக்க வேண்டும். ஜனாதிபதி பதவி விலக வேண்டும்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுகையில், இந்த அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கிய மக்களே அரசாங்கத்துக்கு எதிராக வீதிக்கிறங்கி குரல் எழுப்புகின்றனர். 

அந்த மக்கள் வழங்கிய ஆணையை மீள பெற்றுக்கொள்ள வீதிக்கி இறங்கி இருக்கின்றனர். அதனால் மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு ஜனாதிபதி பதவி விலகவேண்டும். அதன் மூலமே மக்களின் எதிர்ப்பு போராட்டத்தை கட்டுப்படுத்த முடியும். இந்த அரசாங்கத்துக்கு இரண்டு வருடங்கள் கடந்துள்ளன. அதனால் தற்போது இந்த அரசாங்கத்துக்கு முடியாது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர் என்றார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க கூறுகையில், நாட்டின் தவறான நிருவாகத்தை கண்டு இன்று மக்கள் பொறுமை இழந்து போராட்டத்தில் குதித்துள்ளனர். மக்கள் பொறுமையிழந்து போராட்டத்தில் ஈடுபடுவதை கண்டு அரசாங்கம் அஞ்சுகின்றது. ஜனாதிபதி மீதும் அரசாங்கத்தின் மீதும் ஏற்பட்டுள்ள அதிருப்தியின் காரணமாகவே கோட்டா வீட்டுக்கு போ என மக்கள் கோசம் எழுப்புகின்றனர். மக்களை ஒருபோதும் வன்முறையின் பக்கம் திருப்ப நாம் நினைக்கவில்லை. எமது மக்களையும் நாட்டையும் பாதுகாக்க வேண்டும் என்பதே எமதும் நிலைப்பாடாகும். ஆனால் மக்களின் ஜனநாயக போராட்டத்திற்கு செவி மதுக்க வேண்டும். மக்களின் எதிர்ப்பு போராட்டத்தை தாக்குபிடிக்க முடியாது இன்று ஜனநாயகம், மனித உரிமைகள், அமைதி குறித்து ஆளுந்தரப்பினர் பேசுகின்றனர் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08