வனாத்துவில்லு வெடிபொருட்கள் களஞ்சிய விவகாரம் : பிணை தொடர்பான உத்தரவு ஒத்திவைப்பு

By T Yuwaraj

06 Apr, 2022 | 10:26 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

புத்தளம் - வனாத்துவில்லு, லக்டோஸ் தோட்டத்தில்,  வெடிபொருட்களை சேகரித்து களஞ்சியப்படுத்தும் மற்றும் உற்பத்தி செய்யும் இடமொன்றினை முன்னெடுத்து சென்றமை தொடர்பில், தேசிய தெளஹீத் ஜமா அத்  எனும் தடை செய்யப்பட்ட அமைப்பின் முக்கியஸ்தரான நெளபர் மெளலவி உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் புத்தளம் மேல் நீதிமன்றில்  தக்கல் செய்த வழக்கில் பிரதிவாதிகளின் பிணை கோரிக்கை தொடர்பிலான நீதிமன்ற உத்தரவு எதிர்வரும் மே 20 இல் அறிவிக்கப்படவுள்ளது.  

இந்த விவகார வழக்கு விசாரணைகள்,  கடந்த திங்களன்று  ( 4) இவ்வழக்கினை  விசாரணை செய்யவென  புத்தளம் மேல் நீதிமன்றில் அமைக்கப்பட்டுள்ள மூவர் கொண்ட சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிபதிகள் குழாம் முன்னிலையில்,  விசாரணைக்கு வந்தது. இதன்போதே இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.  அத்துடன் தொடர்ச்சியாக இவ்வழக்கினை விசாரணை செய்ய   ஏற்கனவே திகதிகளைக் குறித்துள்ள  சிறப்பு நீதிமன்றம்,  மே 30,31 ஆம் திகதிகளிலும்,  ஜூன் 1,7,9  ஆம் திகதிகளிலும் அவ்விசாரணைகளை முன்னெடுப்பது என தீர்மானித்து  இதற்காக  9, 11 முதல் 15 வரையிலான சாட்சியாளர்களுக்கு சாட்சியம்  வழங்க மன்றில் ஆஜராகுமாறு அறிவித்தலும் முதற்கட்டமாக அனுப்பட்டுள்ளது.

 இவ்வாறான நிலையில் எதிர்வரும் மே 20 ஆம் திகதி பிணை உத்தரவுக்கு மேலதிகமாக,  'வழக்கு விசாரணைக்கு முன்னரான ஒன்றுகூடலுக்கான' ( pre trial conference)   திகதியாகவும் நீதிமன்றம் தீர்மனித்துள்ளது.

இவ்வழக்கில், தற்போதும்   மரணமடைந்துள்ள மொஹம்மட் சஹ்ரான் ஹாஷிம் மற்றும்  அச்சு மொஹம்மது அஹமது ஹஸ்தூன் ஆகியோருடன் இணைந்து, வனாத்துவில்லு பகுதியில் வெடிபொருட்களை சேகரிக்கும் மற்றும் தயாரிக்கும் இடமொன்றினை முன்னெடுத்து சென்றதாக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ்  6 பேருக்கும் எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அபூ தஹ்தா எனும்  அபூ ஹனீபா மொஹம்மட் முபீஸ், அபூ சாபியா எனும்  அமீர் ஹம்சா மொஹம்மட் ஹமாஸ்,  கபூர் மாமா அல்லது கபூர் நாநா எனும் மொஹம்மட் சரீப் ஆதம் லெப்பை, அபூ உமர் எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம்  சாதிக் அப்துல்லாஹ், அபூ செய்த் எனும் நெளபர் மெளலவி அல்லது   மொஹம்மட் இப்ராஹீம் நெளபர்,  அபூ நஜா எனப்படும் மொஹம்மட் ரமீஸ் மொஹம்மட் சாஜித் அல்லது சாஜித் மெளலவி ஆகிய 6 பேருக்கே மேற்படி குற்றப் பகிர்வுப் பத்திரம் கையளிக்கப்பட்டுள்ளது.

 நாசகார அல்லது பயங்கரவாத செயற்பாடுகளை  முன்னெடுக்கும் எண்ணத்துடன் வனாத்துவில்லு பகுதியில் வெடிபொருட்களை சேகரிக்க சதி செய்தமை,  யூரியா நைற்றேட், நைற்றிக் அசிட், தோட்டாக்கள் உள்ளிட்ட வெடிபொருட்களை சேகரித்தமை,  வெடிபொருட்களை உற்பத்தி செய்தமை தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் 2 (1) உ பிரிவின் கீழும், 3 (2) ஆம் பிரிவின் கீழும் பிரதிவாதிகளுக்கு எதிராக விஷேட குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் வெடிபொருள் சேகரிப்பு, தயாரிப்பு, ஆயுத பயிற்சி உள்ளிட்டவற்றுக்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் அனைத்து பிரதிவாதிகளுக்கும் எதிராக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

 இதனைவிட,  முதல் பிரதிவாதியான அபூ தஹ்தா எனப்படும் மொஹம்மட் முபீஸ் மீது,  பயங்கரவாதத்துக்கு நிதியளித்தலை தடுக்கும் சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் 3 ஆம் உறுப்புரையின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆயுத களஞ்சியத்துடன் கூடிய  வனாத்துவில்லு லக்டோ தோட்டத்தின் ஒரு பகுதியை ஆயுத பயிற்சிகளை முன்னெடுக்க  அபூ உமர் எனும் சாதிக் அப்துல்லாஹ்வுக்கு வழங்கியமை தொடர்பில் அந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசிலமைப்பின் 22 ஆம் திருத்தச் சட்டமூலம்...

2022-09-30 16:44:39
news-image

அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் இலவச...

2022-09-30 16:40:29
news-image

சுகாதாரத்துறை வீழ்ச்சியடையவில்லை - அமைச்சர் கெஹலிய

2022-09-30 16:31:29
news-image

வெகுவிரைவில் அரசாங்கத்தை கவிழ்ப்போம் - குமார...

2022-09-30 16:10:50
news-image

மிருகக்காட்சி சாலைக்கு இலவசமாக செல்ல அனுமதி...

2022-09-30 16:05:36
news-image

வடக்கு, கிழக்கு மக்களின் நிலங்களை தொல்பொருள்...

2022-09-30 16:30:11
news-image

தகவல் அறியும் ஆணைக்குழுவும் அழுத்தங்களை எதிர்...

2022-09-30 22:20:09
news-image

ஒக்டோபர் மாத இறுதியில் அரசியல் சுனாமி-...

2022-09-30 16:48:48
news-image

சவுக்கு மரங்களை வெட்டிக் கடத்த முற்பட்ட...

2022-09-30 16:45:32
news-image

யாழில் வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த வீடு உடைத்து...

2022-09-30 16:43:33
news-image

'ஹெல்பயர்' இசை நிகழ்வு - பெயரை...

2022-09-30 16:35:59
news-image

'தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை'...

2022-09-30 16:38:33