(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வசீம்)
அரசாங்கம் மக்களுக்கு செய்யவேண்டிய கடமையை செய்ய தவறி இருக்கின்றது. அதனால்தான் அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தை வழங்கிய மக்களே அரசாங்கத்துக்கு எதிராக வீதிக்கி இறங்கி இருக்கின்றார்கள் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசாங்கம் மக்களுக்கு செய்யவேண்டிய கடமையை தவறியுள்ளது. அதனால்தான் மக்கள் இன்று வீதிக்கிறங்கி பாேராடி தங்களின் தேவைகளை நிறைவேற்றுமாறு கோரி வருகின்றனர்.
அரசாங்கம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை வைத்துக்கொண்டு எதனையும் செய்ய முடியும் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தது.
அதனால் அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நினைத்த பிரகாரம் செயற்பட்டுவந்ததன் விளைவே இந்த ஆர்ப்பாட்டம்.
அத்துடன் இந்த அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கிய மக்களே அரசாங்கத்துக்கு எதிராக வீதிக்கிறங்கி குரல் எழுப்புகின்றனர்.
அந்த மக்கள் வழங்கிய ஆணையை மீள பெற்றுக்கொள்ள வீதிக்கி இறங்கி இருக்கின்றனர். அதனால் மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு ஜனாதிபதி பதவி விலகவேண்டும்.
அதன் மூலமே மக்களின் எதிர்ப்பு போராட்டத்தை கட்டுப்படுத்த முடியும். இந்த அரசாங்கத்துக்கு இரண்டு வருடங்கள் கடந்துள்ளன. அதனால் தற்போது இந்த அரசாங்கத்துக்கு முடியாது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.
அதனால் ஜனாதிபதி மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு பதவி விலகவேண்டும். அதன் பின்னர் இந்த சபையில் இருந்து ஒருவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்துகொள்ளவேண்டும்.
என்றாலும் தற்போதுள்ள நிலையில் ஜனாதிபதி பதவி விலகினாலும் ஒருவரை ஜனாதிபதியாக நியமித்துக்கொள்ள முடியாத நிலை.
அதனால் மக்கள் போராட்டத்தை கட்டுப்படுத்த எடுக்க இருக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதி மக்களுக்கு தெரிவிக்க தெரிவிக்க வேண்டும். அடுத்துவரும் 3அல்லது 6மாதங்களில் தேர்தலுக்கு செல்வதென்ற பிரகடனத்தை தெரிவிக்கவேண்டும். ஏனெனில் நாட்டின் தற்போதைய நிலையில் அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ள எதிர்க்கட்சியும் தயார் இல்லை.
மேலும் அரசாங்கத்தினால் மக்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மக்கள் இதற்கு முன்னர் கொள்ளையடிக்கப்பட்டனர்.
அதனால்தான் மக்கள் வீதிக்கிறங்கி இருக்கின்றார்கள். அதனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி புதிய மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும்.
புதிய மாற்றத்துக்கு ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். ஒற்றையாட்சி கோஷம் காலம் கடந்தது.இதனை தெரிவித்தே இஇநத மக்களை அரசாங்கம் ஏமாற்றி வந்தது. அதனால் தொடர்ந்தும் அரசியல்வாதிகளின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதற்கு மக்கள் தயார் இல்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM