நாக சைதன்யாவை இயக்கும் வெங்கட்பிரபு

06 Apr, 2022 | 07:21 PM
image

தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகசைதன்யா கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.

'மாநாடு', 'மன்மத லீலை' ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு முதன் முதலாக நேரடி தெலுங்கு திரைப்படம் ஒன்றை இயக்குகிறார். 

பெயரிடப்படாத இந்தப் படத்தில் தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகசைதன்யா கதையின் நாயகனாக நடிக்கிறார். 

Naga Chaitanya shares his list of lockdown recommendations | Telugu Movie  News - Times of India

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாச சித்தூரி பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

படத்தில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'சென்னை 28', 'மாநாடு' போன்ற வித்தியாசமான- பரீட்சார்த்தமான படைப்புகளை வழங்கி வெற்றியை குவித்திருக்கும் இயக்குநர் வெங்கட் பிரபு முதன்முதலாக தெலுங்கில் இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்திற்கு தொடக்க அறிவிப்பு நிலையிலேயே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right