Published by T. Saranya on 2022-04-06 15:59:41
இந்தியாவில் ஒரு தந்தை குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தையை ஹெலிகொப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்து அழைத்து வந்து உள்ளார்.
மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் ஷெல்காவோன் பகுதியை சேர்ந்தவர் விஷால் ஜரேகர் வக்கீலாக பணியாற்றி வந்துள்ளார். இவரின் மனைவிக்கு கடந்த ஜனவரி 22-ம் திகதி பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

பிரசவத்திற்கு பிறகு விஷால் ஜரேகரின் மனைவி, போசாரி பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வந்தாதுள்ளார்.
அவர்களது குடும்பத்தில் பல தலைமுறைகளாகப் பெண் குழந்தையே இல்லை. முதன்முறையாக இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதனை கொண்டாடும் விதமாக ஹெலிகொப்டரை வாடகைக்கு எடுத்துள்ளனர். போசாரியில் இருந்து ஷெல்ஹாவோனில் உள்ள தனது வீட்டிற்கு ஹெலிகொப்டரில் குழந்தையையும், மனைவியையும் தந்தை விஷால் ஜரேகர் அழைத்து வந்துள்ளார்.
விஷால் ஜரேகரின் இந்த செயலை நேரில் பார்த்தவர்கள் வியப்பு அடைந்துள்ளனர். இதைப்பற்றி சமூக வலைத்தளங்களில் பரபப்பாக பேசி வருகின்றார்கள்.