பூஜையுடன் தொடங்கிய 'தளபதி 66'

06 Apr, 2022 | 07:01 PM
image

நடிகர் விஜய் நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 66' என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா இன்று ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

'தோழா' படத்தை இயக்கிய இயக்குநர் வம்சி இயக்கத்தில் தயாராகவிருக்கும்  பெயரிடப்படாத புதிய திரைப்படத்தை இயக்குகிறார், இதில் நடிகர் விஜய் கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார். 

கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். 

இப்படத்தின் தொடக்கவிழா இன்று ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. 

இவ்விழாவில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, தயாரிப்பாளர் தில் ராஜு, இயக்குநர் வம்சி, நடிகர் சரத்குமார், படத்தொகுப்பாளர் கே.எல். பிரவீண் உள்ளிட்ட பலர் பங்குபற்றினர்.

நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியிருக்கும் 'பீஸ்ட்' ஏப்ரல் 13ஆம் திகதியன்று வெளியாகவிருக்கும் நிலையில் அவருடைய புதிய படத்தின் தொடக்கவிழா நடைபெற்றிருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்