(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வசீம்)
ஜனாதிபதியின் வீட்டை சுற்றிவலைத்து அவரை தாக்குவதற்கு முற்பட்ட சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டே நாட்டில் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது.
அவசரகால நிலைமையின் போது இவ்வாறான தீர்மானங்களை மேற்கொள்வது சாதாரண விடயமாகும் என சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச விசேட கூற்றொன்றை முன்வைத்து தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பட்டார். சஜித் பிரேமதாச தெரிவிக்கையில்,
ஜனாதிபதி அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தி இருந்தார். ஊரடங்கு சட்டம் போடப்பட்டிருந்தது. அதேபோன்று சமூக வலைத்தலங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தும் வகையில் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயங்கள் எதுவும் இடம்பெற்றதா? பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஏதாவது தகவல் கிடைத்ததா? அல்லது வேறு ஏதாவது பயங்கர சம்பவம் இடம்பெற்றதா என்பது தொடர்பான பூரண விளக்கத்தை அரசாங்கம் தெரிவிக்கவேண்டும்.
அதேபோன்று கடந்த சனிக்கிழமை மாலை 6 மணியில் இருந்து திங்கட்கிழமை காலை 6மணிவரை நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.
அதேபோன்று அனைத்து சமூக வலைத்தலங்களையும் தடை செய்திருந்தது. எந்த காரணத்துக்காக அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்திருந்தது என்பது தொடர்பாக சபைக்கு தெளிவுபடுத்தவேண்டும்.
அதேபோன்று இன்று நாட்டில் நிதி அமைச்சர் ஒருவர் இல்லை. இது பாரிய பிரச்சினை. நிதி அமைச்சர் ஒருவர் நேற்று நியமிக்கப்பட்டார்.
அவர் மறுநாள் சபைக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துவிட்டு பதவியை ராஜினாமா செய்தார். மாலை நேரத்தில் நிதி அமைச்சின் செயலாளர் ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் நாட்டில் நிதி அமைச்சர், அமைச்சின் செயலாளர் இல்லாமல் நாடு வங்குரோத்து அடைந்திருக்கின்றது. இவ்வாறான நிலையில் நாட்டின் நிதி முகாமைத்துவத்தை எவ்வாறு செயற்படுத்துவது என கேட்கின்றேன் என்றார்.
இதற்கு சபைமுதலவர் தினேஷ் குணவர்த்தன தொடர்ந்து பதிலளிகையில்,
நாட்டு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளனர் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.
இதனை தாங்கிக்கொள்ள முடியாமல் மக்கள் வீதிக்கிறங்கி போராட ஆரம்பித்துள்ளனர். அதன் பிரகாரம் ஜனாதிபதியின் வீட்டை சுற்றிவலைத்து, ஜனாதிபதியை தாக்குவதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சித்தனர்.இந்த சம்பவங்கள் அனைவரும் தெரியும். நாங்கள் இதனை கண்டோம்.
அதேபோன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் அரச சொத்துக்கள் மற்றும் தனியாரின் சொத்துக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தனர். இவ்வாறான மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் இருக்கும்போது இதனை கட்டுப்படுத்த அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்துவது எந்த அரசாங்கத்தினாலும் மேற்கொள்ளப்படும் விடயமாகும்.
அதேபோன்று நாட்டில் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள், பேரணிகள், நிலைமையை சீர்குளைக்கும் சம்பவங்கள் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக பல தகவல்கள் கிடைத்ததால், அதனை கட்டுப்படுத்த நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
என்றாலும் நாட்டில் பலவேறு பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றாலும் அதனால் வன்முறைகள் இடம்பெறாது என்ற நம்பிக்கை பாதுகாப்பு தரப்புக்கு இருந்ததால், பாதுகாப்பு சபையுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து ஜனாதிபதி அவசரகால சட்டத்தை நீக்கிக்கொள்வதாக அறிவித்திருக்கின்றார்.
நாட்டில் அவசரகால நிலைமைகள் ஏற்படும்போது, ஆளும் அரசாங்கம் யாராக இருந்தாலும் அதனை கட்டுப்படுத்த அவசரகால சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. இது சாதாரண விடயம்.
அதேபோன்று நிதி அமைச்சர் ஒருவரை ஜனாபதி நியமித்திருந்தார். அவர் இராஜினாமா செய்திருக்கின்றார். அதனால் ஜனாதிபதி புதிய நிதி அமைச்சர் ஒருவரை விரைவில் நியமிப்பார் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM