கடந்த முதலாம் திகதி முதல் நாடு முழுவதும் அமுலாகும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அவசர கால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.

அந்தவகையில், ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தை செவ்வாய்க்கிழமை 5) நள்ளிரவுடன் நீக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டார்.

Image

இவ்வாறு ஜனாதிபதியினால் அவசர கால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த நிலையில், வெளிநாடுகள் இலங்கை செல்லும் தமது பிரஜைகளுக்கு எச்சரிக்கை செய்திருந்தன.

அத்துடன் அவசர கால சட்டத்தை நீக்குமாறும் நாடளாவிய ரீதியில் போராட்டங்களும் பல அமைப்புக்களும் கோரிக்கை விட்டிருந்ததை குறிப்பிடத்தக்கது.