அம்பாறை சவளக்கடை பிரதேசத்தில் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய 24 வயதுடைய இளைஞருக்கு  5 வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட 2 மாத சிறைத்தண்டனையும் 2 மாதங்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்தும் 7 ஆயிரத்து 500 ரூபா தண்டப்பணத்தை செலுத்துமாறும்   கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் இஸ்மயில் பயாஸ் ரசாக் உத்தரவிட்டார்.

கல்முனை பிரதேசத்தில் இருந்து நாவிதன் வெளி பிரதேசத்திற்கு சம்பவதினமான திங்கட்கிழமை(17) ஆம் திகதி மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற 24 வயதுடைய இளைஞரை சவளக்கடை பிரதேசத்தில் வைத்து வீதி போக்குவரத்து பொலிசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்படுத்ததிய போது மேற்படி தண்டனையை விதித்துள்ளார்.