(சுபத்ரா)
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் கொழும்பு பயணத்தின் போது, கையெழுத்திடப்பட்ட ஆறு புரிந்துணர்வு உடன்பாடுகளில், பெரும்பாலானவை குறித்த சர்ச்சைகள் எழுப்பப்படுகின்றன.
கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை அமைத்தல், கப்பல்களைப் பழுதுபார்க்கும் மிதவைத் தளம் மற்றும் டோனியர் கண்காணிப்பு விமானங்களை வழங்குதல், யாழ்ப்பாணம் தீவகப் பகுதிகளில், கலப்பு மின் திட்டங்களை அமைத்தல், வடக்கிலும் தெற்கிலும், மீன்பிடித் துறைமுகங்களை புனரமைப்புச் செய்தல், இலத்திரனியல் ஸ்மாட் அடையாள அட்டைகளை வழங்குதல், ஆகிய ஐந்தும், இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்டுள்ள பிரதான புரிந்துணர்வு உடன்பாடுகளாகும்.
கடந்த மாதம் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, புதுடெல்லிக்குச் சென்று, 1.5 பில்லியன் டொலர் கடன் உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு முன்னதாக, இந்தப் புரிந்துணர்வு உடன்பாடுகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்ட போதே, சர்ச்சைகள் உருவாகத் தொடங்கி விட்டன.
இந்தப் புரிந்துணர்வு உடன்பாடுகளால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என தேசிய சுதந்திர முன்னணி, தேசப்பற்று தேசிய இயக்கம் உள்ளிட்ட இனவாத தரப்புகள் மெல்ல மெல்ல சிங்கள மக்களை உசுப்பேற்றத் தொடங்கின.
இவ்வாறான நிலையில் இந்தியாவுடனான புரிந்துணர்வு உடன்பாடுகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற விமர்சனங்களுக்கு பாதுகாப்பு அமைச்சு தரப்பில் பதிலளிக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் பதில் அறிக்கையில் சில இடங்களில், இதற்கான பேச்சுக்கள் முன்னரே நடத்தப்பட்டன, முன்னரே இணக்கப்பாடு காணப்பட்டது என்று , முன்னைய அரசாங்கத்தின் பதவிக் காலத்தைக் குறிப்பிட்டு காரணம் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
இந்திய அரசாங்கத்திடமிருந்து மிதக்கும் கப்பல்களைப் பழுதுபார்க்கும் தளத்தைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுக்கள், 2015 ஆம் ஆண்டு முதல் இடம்பெற்று வந்ததாக கூறப்பட்டுள்ளது.
கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை அமைப்பதற்கு பாதுகாப்பு அமைச்சினால் 2017ஆம் ஆண்டிலேயே அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2022-04-03#page-23
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM