(எம்.ஆர்.எம். வசீம்,இராஜதுரை ஹஷான்)
பாராளுமன்றில் பெரும்பான்மை பலம் இன்னும் ஆளும் தரப்பினர் வசமே உள்ளது. ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமாயின் எதிர்தரப்பினர் அரசியமைப்பிற்குட்பட்ட வகையில் அடுத்தக்கட்ட நகர்வுகளை முன்னெடுக்கலாம். அரசியமைப்பிற்கு அப்பாற்பட்டு செயற்பட்டால் அது மாறுப்பட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தும் என சபை முதல்வர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற கூட்டத்தொடர் செவ்வாய்க்கிழமை (5) ஆரம்பமானதை தொடர்ந்து நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பட்டார்.
ஜனாதிபதி அரசியலமைப்பினை மீறி செயற்படவில்லை.தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அவர் அனைதது கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கொண்டுள்ளார்கள் என்பதை அரசாங்கம் மறுக்கவில்லை. யோசனைகள் இருப்பினும் தாராளமாக முன்வைக்கலாம். அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட வகையில் சபாநாயர் உட்பட எவருக்கும் செயற்பட முடியாது.
பாராளுமன்றில் பெரும்பான்மை பலம் இன்னும் ஆளுங்கட்சி வசம் தான் உள்ளது. பெரும்பான்மை பலம் நீக்கப்பட்டுள்ளது என எதிர்தரப்பினர் கருதுவார்களாயின் அடுத்தக்கட்ட நகர்வினை முன்னெடுக்கலாம். ஒன்று பாராளுமன்றில் தீர்மானமொன்றை நிறைவேற்றி பொதுத்தேர்தலுக்கு செல்லலாம்.
அல்லது எதிரணியினர் பெரும்பான்மை பலத்தை பாராளுமன்றில் உறுதிப்படுத்தி அரசாங்கத்தை ஸ்தாபித்துக்கொள்ளலாம் இதுவே அரசியலமைப்பு ரீதியிலான இரு தீர்மானங்களாகும். இதற்கு அப்பாற்ப்டு எதனையும் செயற்படுத்த முடியாது.
பாராளுமன்ற செயற்பாடுகள் அரசியலமைப்பிற்கு அமைய முன்னெடுத்து செல்லப்பட வேண்டும் என்பதற்காக வே ஜனாதிபதி நான்கு அமைச்சுக்களை தற்காலிகமாக நியமித்துள்ளார். பாராளுமன்றத்தின் ஜனநாயக செயற்பாடுகளுக்கு எதிராக செயற்பட முடியாது..
நாட்டு மக்கள் எதிர்க்கொண்டுள்ள நெருக்கடி நிலைமை யை அரசாங்கம் ஒருபோதும் மறுக்கவில்லை. நெருக்கடிக்கு தீர்வு காண ஜனாதிபதி ஆரம்பத்திலிருந்து அதிக கவனம் செலுத்தியுள்ளார். அனைத்து கட்சிகளின் யோசனைகளையும் ஒருமுகப்படுத்தி சிறந்த தீர்மானத்தை செயற்படுத்த ஜனாதிபதி சர்வ கட்சி மாநாட்டை நடத்தினார்.
பிரச்சிளைகளுக்கு தீர்வு காணும் யோசனைகளை ஜனாதிபதியிடம் தாராளமாக முன்வைக்கலாம்.தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும். தற்போதைய சூழலில் அரசியவ் இலாபம் தேடிக் கொள்ளும் வகையில் பிரச்சினைகளை தீவிரப்படுத்துவது பொருத்தமற்றதாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM