இலக்குகளில்லாத பயணம் 

05 Apr, 2022 | 08:45 PM
image

(எம்.எஸ்.தீன்)

முஸ்லிம் கட்சிகளை எடுத்துக் கொண்டால் அவற்றின் நடவடிக்கைகள் பெரும்பாலும் சமூகத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. 

முஸ்லிம் சமூகத்தின் உரிமைசார் பிரச்சினைகளை தேர்தல் காலங்களில் மாத்திரம் அலசிக் கொண்டிருப்பதனையே தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கின்றன. 

அதேவேளை, முஸ்லிம் கட்சிகள் காலத்திற்கு காலம் ஆட்சியமைக்கும் பேரினவாதக் கட்சிகளுடன் இணைந்து அமைச்சர் பதவிகளையும், வேறு சொகுசுகளையும் பெற்றுக் கொள்ளும் போக்கை கொண்டதாகவும் அவற்றின் செயற்பாடுகள் இன்றுவரைக்கும் காணப்படுகின்றன. 

ஆளுங்கட்சியில் இருக்கின்றபோது ஒரு நிலைப்பாட்டையும், எதிர்க்கட்சியில் இருக்கின்றபோது மற்றுமொரு நிலைப்பாட்டையும் முஸ்லிம் கட்சிகள் பின்பற்றிக் கொண்டிருக்கின்றன. 

ஆயினும், எந்தத் தரப்பில் இருந்தாலும் முஸ்லிம் சமூகத்தின் உரிமைசார் விவகாரங்களை முன்வைத்து வீதியில் இறங்கி ஜனநாயகப் போராட்டங்களை நடத்தக் கூடியவகையில் முஸ்லிம் கட்சிகளின் செயற்பாடுகள் ஒரு போதும் இருந்ததில்லை. 

சமூகத்திற்கு எதிராக ஆட்சியாளர்கள் மேற்கொள்ளும் அநியாயங்களை கண்டும் காணாது போலவே இருந்து வருகின்றன. 

2001ஆம் ஆண்டு மாவனல்லையில் முஸ்லிம் விரோத சக்திகள் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் போன்றவற்றை தாக்கினார்கள். 

இக்காலப் பகுதியில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட முஸ்லிம் அமைச்சர்கள் பலர் இருந்தார்கள் ஆயினும், தாக்குதல்தாரிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. 

இத்தாக்குதல் தொடர்பில் ரவூப் ஹக்கீம் ஆங்கில பத்திரிகையில் 'வளர்ந்துவரும் முஸ்லிம் விரோத போக்கை கட்டுப்படுத்தாவிட்டால் அரசாங்கத்தின் பங்காளியாக இருக்க வேண்டிய தார்மிகக் கடப்பாடு தமக்கு இல்லை' என்று தெரிவித்திருந்தார். 

இவ்வாறு அவர் தெரிவித்த நிலையில் பின்னர் ஐ.தே.க.வின்  தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டு வைத்துக் கொண்டு செயற்பட்டார். 

ரணில் பிரதமராக இருந்த போது முஸ்லிம்களின் மீது கிழக்கு மாகாணத்தில் பல இடங்களில் பாதுகாப்பு தரப்பினர் முன்னிலையில் ஆயுததாரிகள் தாக்குதல்களை மேற்கொண்டனர். 

2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் அளுத்கம, பேருவளை, தர்காநகர் பகுதியில் பௌத்த இனவாதிகள் முஸ்லிம்களின் மீது தாக்குதல்களை மேற்கொண்டனர். 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2022-04-03#page-22

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்