சட்டென மாறும் களநிலை : முஸ்லிம்கள் மிகக் கவனமாக செயற்பட வேண்டிய தருணம் 

05 Apr, 2022 | 08:38 PM
image

(ஏ.எல்.நிப்றாஸ்)

உலக வரலாற்றில் நினைத்துப் பார்த்திராத அபூர்வங்களை எல்லாம் காலம் நிகழ்த்திக் காட்டியிருக்கின்றது.

அந்தவகையில், இலங்கையில் தற்போது நடக்கின்ற அரசியல், பொருளாதார நெருக்கடிகளும் அதன் விளைவாக வெடித்துள்ள எதிர்ப்பு போராட்டங்களும், எங்கே போய், எவ்விதம் முடியப் போகின்றது என்று தெரியாது.

இது ஒரு வரலாற்றுப் பாடத்தின் தொடக்கப் புள்ளியாகலாம். அல்லது கடைசியில் எல்லாம் பூச்சியமாகியும் விடலாம். 

தீர்க்கமான ஒரு தருணத்தில், சரியான அணுகுமுறையை கையாளாத அரசாங்கம் தற்போது இப்படியான ஒரு முட்டுச் சந்துக்குள் வந்து நிற்கின்றது.

இந்தப் பின்னணியில், களநிலைமைகள் எந்தளவுக்கு தலைகீழாக மாறியிருக்கின்றன என்பதை நினைத்துப் பார்க்கவே முடியாதுள்ளது.

சிங்கள மக்களின் உணர்வுகளின் மேல் நின்று அரசியல் செய்தவர்களை அந்த மக்களே வெறுக்கும் நிலை உருவாகியுள்ளது. 

அத்தியாவசியப் பொருட்களுக்காக மக்கள் படுகின்ற கஷ்டம் அந்த மக்களை அரசுக்கு எதிராக வீதிக்கு தள்ளுமளவுக்கு அழுத்தமானதாகவும் இருக்கின்றது.

கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதியின் வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் அரசாங்கம் அறிவித்துள்ளது போல, 'ஒரு கடும்போக்கு குழுவாக' இருக்கலாம் ஆனால், நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் இதனையொத்த மனநிலையிலேயே உள்ளனர் என்பதை மறுக்கவியலாது. 

69 இலட்சம் மக்கள் வாக்களித்ததாக பெருமையடித்துக் கொண்ட மொட்டு அரசாங்கத்தை அதைவிட இருமடங்கான மக்கள் நேரிடையாகவே விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதில் கைதேர்ந்தவர்கள் என்று ராஜபக்ஷர்களுக்கு இருந்த பெருமையும், கடந்த இரு தேர்தல்களில் சிங்கள மக்கள் மத்தியில் கட்டியெழுப்பிய பிம்பமும் உடையத் தொடங்கியுள்ளதாக தெரிகின்றது. 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2022-04-03#page-27

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

படைக்குள் உருவாகும் குழப்பம்

2023-12-10 22:59:03
news-image

பிரித்தானியாவின் பதில் என்ன?

2023-12-10 23:00:23
news-image

கடைசி மூச்சை இழுத்து கொண்­டி­ருக்­கி­றது இஸ்ரேல்

2023-12-10 23:17:37
news-image

ஒல்­லாந்தில் இஸ்­லா­மிய வெறுப்­பா­ளரின் தேர்தல் வெற்றி:...

2023-12-10 23:19:27
news-image

அதிர்வுகளை ஏற்படுத்தப்போகும் தலைமைத்துவ போட்டி

2023-12-10 23:19:47
news-image

ஹென்றி கீசிங்கரும் வரலாற்றில் அவரின் வகிபாகமும்

2023-12-10 23:07:09
news-image

அரசியல்வாதிகளின் கடின பணியும் சுற்றியுள்ள கூட்டத்தின்...

2023-12-10 23:06:56
news-image

மறந்து போனதா பாடங்கள்?

2023-12-10 23:05:12
news-image

தாயகம் திரும்பியோர் மீண்டும் இலங்கைக்கு வருவது...

2023-12-10 23:05:24
news-image

பூகோள தட்ப வெபப அரசியல்

2023-12-10 18:41:05
news-image

துபாய் காலநிலை மாற்ற மாநாடு உலகின்...

2023-12-10 18:38:25
news-image

வரி செலுத்­துவோர் அடை­யாள எண்

2023-12-10 18:38:50