முதல்வரின் முதற்பயணமும்  வெளிக்கிளம்பிய சர்ச்சைகளும்

05 Apr, 2022 | 07:53 PM
image

(குடந்தையான்)

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று பத்து மாதங்கள் கடந்த நிலையில் முதன்முதலாக அவர் அரசு சார்பில் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டார். 

இந்தப் பயணத்தை அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கடுமையாக எதிர்த்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. 

அதிலும் குறிப்பாக பா.ஜ.க.வின் தமிழக மாநிலத் தலைவரான அண்ணாமலை, கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். 

இதுதொடர்பான விவாதங்களே தற்போது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா உதயநிதி ஸ்டாலின், அரசு அதிகாரிகள் என்று பத்திற்கும் மேற்பட்டவர்கள் கொண்ட தமிழக குழுவினர், அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நான்கு நாள் பயணம் மேற்கொண்டனர். 

சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படுவதிலிருந்து, டுபாய் விமான நிலையத்தில் இறங்கும் வரையில் மட்டுமல்லாமல், அங்கு நடைபெற்ற வர்த்தக கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்குபற்றியமையானது அனைத்துலக தமிழர்கள் மற்றும் இந்தியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

அத்துடன் அங்கு பல்வேறு தொழிலதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டார்.

அதன் பிறகு தமிழகம் திரும்பியவுடன் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், 'ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மேற்கொண்ட பயணத்தின் மூலம் தமிழகத்தில் 6100 கோடி ரூபாக்கான முதலீடுகளை பெற்றுள்ளோம். 

இதன்மூலம் தமிழகத்திலுள்ள பதினையாயிரம் இளைஞர்களுக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும், ஆகவே எனது முதலாவது வெளிநாட்டு பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது' என்றார்.

எனினும், பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, 'முதல்வர் ஸ்டாலினின் அரசுமுறைப் பயணத்தை அரசு செலவிலான குடும்ப பயணமாக மேற்கொண்டார்' என்று விமர்சித்துள்ளார். 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2022-04-03#page-28

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48