(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆட்சியதிகாரத்தை வழங்க வேண்டாம் என நாட்டு மக்களிடம் 2019ஆம் ஆண்டே குறிப்பிட்டேன்.
எனது ஆரூடம் தற்போது உண்மையாகியுள்ளது. நாட்டு மக்கள் கோ ஹோம் கோட்டா என்ற எதிர்ப்பு பதத்துடன் கோ ஹோம் ராஜபக்ஷ என்ற பதத்தையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.
இடைக்கால அரசாங்கம் என்ற ஏமாற்று செயற்பாட்டையும் மக்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
களுத்துறை பகுதியில் திங்கட்கிழமை (4) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசியல் நோக்கங்களுக்கு அப்பாற்பட்டு நாட்டுக்காக பொது மக்கள் ஒன்றினைந்து வீதிக்கிறங்கியுள்ளமை மகிழ்வுக்குரியது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆட்சியதிகாரத்தை வழங்க வேண்டாம் என நான் 2019ஆம் ஆண்டு நாட்டு மக்களிடம் குறிப்பிட்டேன்.எனது ஆருடம் தற்போது உண்மையாகியுள்ளது.
பிரதேச சபை உறுப்பினர் பதவியை கூட வகிக்காதவரால் நாட்டை நிர்வகிக்க முடியாது.ஆகவே கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்குங்கள் என நான் 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் குறிப்பிட்டேன்.
குடும்ப அரசியலை ஸ்தாபித்துக்கொள்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசியல் மற்றும் பொது நிர்வாகம் தொடர்பில் எவ்வித அனுபவமில்லாதவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கினார். அவர் செய்த தவறின் பிரதிபலனை தற்போது முழு நாடும் எதிர்க்கொள்கிறது.
நாட்டு மக்கள் கோ ஹோம் கோத்தா என்ற எதிர்ப்பு சொற்பதத்துடன் ,கோ ஹோம் ராஜபக்ஷ என்ற பதத்தையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.குடும்ப ஆட்சி எவ்விதத்திலும் என்றாவது பாதிப்பை ஏற்படுத்தும்.
அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்;டம் தீவிரமடைந்துள்ள நிலையில் ஜனாதிபதி இடைக்கால அரசாங்கத்தை அமைக்க முயற்சிக்கின்றமை நாட்டு மக்களை ஏமாற்றும் பிறிதொரு செயற்பாடாகும்.ஆகவே நாட்டு மக்கள் இதற்கு ஒருபோதும் ஏமாற கூடாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM