முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட நால்வருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திலிருந்து 2 கோடியே 94 இலட்சம் செலவீட்டில் முன்னாள் ஜனாதிபதியின் படத்துடன் கூடிய நாட்காட்டி அச்சிடல் சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு  தொடர்பிலேயே இவர்களுக்கு குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த வழக்கு விசாரணையின் போது இன்று (19) குற்றப்பத்திரிக்கை வழங்குவதாக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.