வவுனியா ஏ9 வீதியில் விபத்து : கனடா நாட்டு பிரஜை உட்பட இருவர் படுகாயம்

Published By: Digital Desk 4

03 Apr, 2022 | 11:30 AM
image

வவுனியா ஏ9 வீதி கொக்குவெளி இராணுவ முகாம் அருகே நேற்று (02.04.2022) காலை 9.30 மணியளவில் ஹயஸ் ரக வேன் மற்றும் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் கனடா நாட்டு பிரஜை உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற ஹயஸ் ரக வாகனம்  ஏ9 வீதி கொக்குவெளி இராணுவ முகாம் அருகே ஒரு வாகனத்தினை முந்திச்செல்ல முற்பட்ட போது வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து எதிர்த்திசையில் வவுனியா நகரிலிருந்து நொச்சிமோட்டை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியுடன் நேருக்கு நேர் மோதி இரு வாகனங்களும் தடம்புரண்டு, விபத்துக்குள்ளாகின.

இவ்விபத்தில் முச்சகக்கரவண்டி சாரதியான 43 வயதுடைய குடும்பஸ்தர் மற்றும் முச்சக்கரவண்டியில் பயணித்த கனடா நாட்டு பிரஜையான 55 வயதுடைய நபர் ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக சிகிச்சைக்காக முச்சக்கரவண்டி சாரதி அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் ஹயஸ் ரக வாகனத்தின் சாரதியினை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02