காதலியை திருமணம் செய்வதாக அழைத்துச் சென்று நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன் மற்றும் நண்பர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இந்தியாவில் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையை பகுதியைச் சேர்ந்தவர் பிரிஜித் என்ற சுரேஷ் (27). இவர் அப்பகுதியில் முச்சக்கரவண்டி மற்றும் வேன் சாரதியாக பணிபுரிந்து வந்துள்ளார்.

இவரது வேனில் நாகர்கோவிலில் உள்ள பாடசாலையில் திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அடிக்கடி பயணம் செய்துள்ளார்.   இதனால், அந்த மாணவிக்கும் சுரேஷுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியது.

இதற்கிடையில் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக சுரேஷ் ஆசை வார்த்தை கூறி குறித்த மாணவியினை மூளைச்சலவை செய்துள்ளார். அதனை நம்பிய மாணவியும் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.   பிறகு இருவரும் பல இடங்களுக்கு சென்று சுற்றித் திரிந்துள்ளனர்.

அதன் பின்னர்  இருவரும் நாகர்கோவில் சென்றபோது, அங்கு இரவில் தங்க இடமில்லாததால், சுரேஷின் நண்பர் தினேஷ் மற்றும் கோபால் ஆகியோர் வடசேரி பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து கொடுத்தனர்.   இதனையடுத்து இருவரும் அன்றிரவு ஒன்றாக தங்கியுள்ளனர். மறுநாள் காலையில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கூறி மாணவியின் நகைகளை வாங்கியுள்ளார்.

அதனை அடகு வைத்து தாலி உள்ளிட்ட பொருட்களை வாங்கி வருகிறேன் என்று கூறி வெளியேச் சென்றார்.   ஆனால், அந்த விடுதிக்கு அவரது நண்பர்கள் தினேஷ், கோபால் ஆகியோரும் வந்தனர். அவர்களுடன் குறித்த மாணவியை தனியாக விட்டு சுரேஷ் வெளியேச் சென்று விட்டார்.

சுரேஷ் வெளியேச் சென்ற பின்பு அவரது நண்பர்கள் குறித்த  கத்தி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.   இதற்கிடையே சுரேசின் இன்னொரு நண்பரும்,குறித்த விடுதியின் பக்கத்து அறையில் தங்கி இன்னொரு இளைஞனும் மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். பிறகுதான் மாணவிக்கு, காதலனே தன்னை நண்பர்களுக்கு விருந்தாக்கியது தெரிய வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

சுரேஷ் மற்றும் அவர்களின் நண்பர்களுடன் தகராறு செய்துள்ளார்.   இதற்கிடையில் கடந்த 13ஆம் திகதி முதல் இம்மாணவி திடீரென மாயமானதையடுத்து, அவர் காணாமல் போய்விட்டதாக மாணவியின் பெற்றோர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் பல இடங்களில் மாணவியை தேடி மேற்கொண்ட தேடுதலில், மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.   

இந்நிலையில் நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள ஒரு விடுதியொன்றில் இளம் பெண்ணிற்கும், சில இளைஞர்களுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாக வடசேரி பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் மாயமான மாணவியை சம்பவயிடத்தில் இருப்பதை கண்டு பிடித்தனர்.   பிறகு மாணவியை நடந்தவற்றை பொலிஸாரிடம் தெரிவித்து அளித்த முறைப்பாட்டின் பேரில் வேன் சாரதியான சுரேஷ், மற்றும் அவர்களின் நண்பர்கள் மூவரையும் கைது செய்தனர்.