பதுளையில் கடயில் தீ விபத்து : பொருட்களுக்கு சேதம்

02 Apr, 2022 | 07:32 PM
image

பதுளை, பசறை பிரதான வீதி  பதுளுசிரிகம பகுதி வீடொன்றில் இன்று 02 ஆம் திகதி சனிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

வாடகை முறையில் உணவு பரிமாறும் பொருட்களை பகிரந்தளிக்கின்ற குறித்த வீட்டின் அறையில் பெறுமதியான சமையல் உபகரணங்கள், உணவு பாத்திரங்கள், , சமையல் எரிவாயு சிலிண்டர்கள், அடுப்புக்கள் போன்றவைகள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத் தீச்சம்பவத்தினால், உயிர் ஆபத்துக்கள் எதுவும் இடம்பெறாதபோதிலும், பல் ஆயிரக் கணக்கான பொருட்களுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. 

இத் தீ ஏற்படுவதற்கான காரணங்கள் இதுவரை தெரியவில்லை, மின்சார ஒழுக்கே காரணமென்று பொலிசாருக்கு  சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right