(என்.வீ.ஏ.)
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை வான்கடே விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (01) நடைபெற்ற ஐ.பி.எல். இருபது 20 கிரிக்கெட் போட்டியில் உமேஷ் யாதவின் 4 விக்கெட் குவியல், அண்ட்ரே ரசலின் அபார அரைச் சதம் ஆகியவற்றின் உதவியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்களால் இலகுவாக வெற்றி பெற்றது.
பஞ்சாப் கிங்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட சுமாரான 138 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 14.3 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 141 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது.
சீரான இடைவெளியில் 4 விக்கெட்களை இழந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஓட்டங்களை அதிரடியாக குவத்த வண்ணம் இருந்தது.
அஜின்கியா ரஹானே (12), வெங்கடேஷ் ஐயர் (3), அணித் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் (26), நிட்டிஷ் ரானா (0) ஆகிய நால்வரும் ஆட்டமிழந்த போதிலும் கொல்கத்தா 7 ஓவர்கள் நிறைவில் 51 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இந் நிலையில் சாம் பில்லிங்ஸ், அண்ட்றே ரசல் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 45 பந்துகளில் 90 ஓட்டங்களைப் பகிர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸை வெற்றிபெறச் செய்தனர்.
அண்ட்றே ரசல் 31 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 8 சிக்ஸ்கள், 2 பவுண்ட்றிகளுடன் ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களை விளாசினார். சாம் பில்லிங்ஸ் 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் ராகுல் சஹார் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 18.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை வீரர் பானுக்க ராஜபக்ச மாத்திரமே துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்தி 31 ஓட்டங்களைப் பெற்றார். அவருக்கு அடுத்ததாக கெகிசோ ரபாடா 25 ஓட்டங்களை அதிகப்பட்சமாக பெற்றார்.
பந்துவீச்சில் உமேஷ் யாதவ் ஒரு ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக 4 ஓவர்கள் பந்துவீசி 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இவர் ஆட்டநாயகன் விருதை தனதாக்கிக்கொண்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM