ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு

By T Yuwaraj

01 Apr, 2022 | 11:18 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

ஹிஜ்ரி 1443 புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு சனிக்கிழமை (2) மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற இருக்கின்றது.

ரமழான் தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை | Virakesari.lk

கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள் மற்றும் உலமாக்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். 

நாட்டின் எப்பிரதேசத்திலாவது ரமழான் மாத தலைப்பிறை தென்பட்டால் தகுந்த ஆதாரங்களுடன் 0112432110, 0112451245, 0777316415 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் முஸ்லிம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right