பாராளுமன்றத்தை கலைத்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்கவும் - விமல் வீரவன்ச ஆலோசனை

Published By: Digital Desk 4

01 Apr, 2022 | 07:05 PM
image

 (இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை முழுமையாக குறைவடைந்துள்ளது. நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமாயின் ஜனாதிபதி அமைச்சரவையினை கலைத்து பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் காபந்து அரசாங்கம் (இடைக்கால அரசாங்கம்)ஸ்தாபிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் விஜயத்தை எதிர்க்க மக்கள் அணிதிரள வேண்டும் : விமல்  | Virakesari.lk

என்.எம். பெரேரா மத்திய நிலையத்தில் வெள்ளிக்கிழமை (1) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்தால் மக்களின் போராட்டம் எவ்வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகிக்கும் போது அரசாங்கத்திடம் தொடர்ந்து எடுத்துரைத்தோம்.எமது கருத்துக்கு அரசாங்கம் மதிப்பளிக்கவில்லை தற்போது அனுபவிக்கிறது.

பாரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நாட்டு மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.மக்களாணைக்கு மதிப்பளித்து அரசாங்கம் செயற்படவில்லை.வரலாற்றில் என்றுமில்லாத வகையில் சமூக மற்றும் பொருளாதார கட்டமைப்பி;ல் பாதிப்பினை எதிர்க்கொண்டுள்ளோம்.

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை முழுமையாக இல்லாதொழிந்துள்ளது.தற்போதைய நிலையில் தேர்தல் ஒன்றை நடத்தும் பொருளாதார நிலையில் நாடு இல்லாத காரணத்தினால் ஜனாதிபதி பயனற்ற அமைச்சரவையினை விரைவாக கலைத்து பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றினைத்து காபந்து அதாவது இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும்.

மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டால் அரசாங்கம் மாத்திரமல்ல முழு நாடும் அழிவை நோக்கி செல்ல வேண்டும்.மக்களின் கருத்துக்கு அரசாங்கம் மதிப்பளிக்காவிடின் தோற்றம் பெறும் விளைவுகளை எவராலும் தடுக்க முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தொடர்ந்து மீண்டும்...

2025-02-10 17:40:48
news-image

நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தின் மின்னுற்பத்தி...

2025-02-10 14:19:45
news-image

பிரச்சினைகளுக்கு அரசாங்கத்துக்கு பதிலாக குரங்குகள் தான்...

2025-02-10 17:42:24
news-image

43 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இழப்பீடு...

2025-02-10 17:39:30
news-image

வலுவான உணவுப் பாதுகாப்புக் கொள்கைக்  கட்டமைப்பிற்கு...

2025-02-10 21:57:49
news-image

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி!

2025-02-10 20:57:38
news-image

நிறுவனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டை மேம்படுத்த அரச தனியார்...

2025-02-10 17:47:33
news-image

8 வாரங்களாக நிலைமை குறித்து அறிந்திருந்தும்...

2025-02-10 17:44:05
news-image

தனது இயலாமையை மறைத்துக் கொள்ள உயிரினங்களை...

2025-02-10 17:48:14
news-image

யு.எஸ்.எ.ஐ.டி நிறுவனத்தில் இருந்து நிதி பெற்றுக்...

2025-02-10 17:41:18
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள்...

2025-02-10 19:00:18
news-image

ரணில் - சஜித் விரைவாக ஒரு...

2025-02-10 17:33:37