நாளை சுழற்சி முறையில் மின் துண்டிப்பு

Published By: Digital Desk 4

01 Apr, 2022 | 06:15 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாடு தழுவிய ரீதியின் நாளைய தினம் சுழற்சி முறையில் 08 மணித்தியாலங்களும், 30 நிமிடங்களும் மின்விநியோக தடை அமுல்படுத்தப்படும். மின்சார சபை முன்வைக்கும் கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டதை தொடர்ந்தே மின்விநியோக தடை அமுலுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு  அறிவித்துள்ளது.

நாட்டில் நாளை நீண்ட நேர மின் துண்டிப்பு | Virakesari.lk

மின்விநியோக தடை தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைக்கும் யோசனைகள் முழுமையாக பரிசீலனை செய்யப்பட்டதை தொடர்ந்து மின்விநியோக தடைக்கு அனுமதி வழங்கிறது. மின்விநியோக பிரச்சினைக்கு விரைவில் சிறந்த தீர்வை முன்னெடுக்குமாறு தொடர்ந்து அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருகிறோம் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டார்.

நாளைய தினம் 8 மணித்தியாலங்களும் ,30 நிமிடங்களும் நாடு தழுவிய ரீதியில் சுழற்சி முறையில் மின்விநியோக தடை அமுல்படுத்தப்படும்.அதற்கமைய ஆங்கில எழுத்தில் A தொடக்கம் F வரையிலான வலயங்களில் உள்ளடங்கும் பிரதேசங்களில் காலை 08 மணிமுதல் பகல் 12 மணிவரை 4 மணித்தியாலங்களும்,மாலை 4 மணிமுதல் இரவு 7மணி வரை  மணித்தியாலங்களும்,இரவு 9 மணிமுதல் இரவு 10.30 மணி வரை ஒன்றரை மணித்தியாலங்களும் மின்விநியோகம் தடை செய்யப்படும்.

அத்துடன் ஆங்கில எழுத்தில் G தொடக்கம் L வரையிலான வலயங்களில் உள்ளடங்கும் பிரதேசங்களில் பகல் 12 மணிமுதல் மாலை 4மணி வரை 4 மணித்தியாலங்களும், மாலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரை 3 மணித்தியாலங்களும்,இரவு 10.30 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை ஒன்றரை மணித்தியாலங்களும் மின்விநியோக தடை அமுல்படுத்தப்படும்.

ஆங்கில எழுத்தில் P தொடக்கம் S வரையிலான வலயங்களில் உள்ளடங்கும் பிரதேசங்களில் காலை 8 மணிமுதல் பகல் 12 மணிவரை 4 மணித்தியாலங்களும்,மாலை 4 மணிமுதல் இரவு 7 மணிவரை 3 மணித்தியாலங்களும்,இரவு 9 மணிமுதல் இரவு 10.30- மணி வரை ஒன்றரை மணித்தியாலங்களும் மின்விநியோக தடை அமுல்படுத்தப்படும்.

அத்தடன் ஆங்கில எழுத்தில் T தொடக்கம் W வரையிலான வலயங்களில் உள்ளடங்கும் பிரதேசங்களில் இரவு 10.30 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையும், மின்விநியோக தடை அமுல்படுத்தப்படும் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32