ஹம்பாந்தோட்டை  கடற்பரப்பில் 5000 மெகாவொட் காற்றாலை மின் திட்டம்  

01 Apr, 2022 | 11:40 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

 

வெளிநாட்டு முதலீட்டொன்றின்  மூலம் ஹம்பாந்தோட்டை  கடற்பரப்பின் மீது 5000 மெகாவொட் காற்றாலை மூலமான மின் சக்தி நிலையமொன்றை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக  சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின் உற்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார். 

இதன் 4000 மெகாவொட்  மின்சாரத்தை சிங்கப்பூருக்கு வழங்கவுள்ளதுடன், மிகுதி 1000 மெகாவொட் மின்சாரத்தை நாட்டின் தேவைக்காக பயன்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக நிலையத்தில் கடந்த வியாழன்று ந‍டைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

"நாட்டில் மின்சாரம் இல்லாத நேரத்தில், பல்வேறு விதமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும்,  கடலைப் பயன்படுத்தி மின்சாரத்தி உற்பத்தி செய்து, வெளிநாட்டுக்கு வழங்கி நாட்டுக்கு வருமானம் ஈட்டுவதை நாடென்ற வகையில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.  

இலங்கை, இதுவரை மின்சாரம் ஏற்றுமதி செய்வதைப் பற்றியும், இஅதன் மூலம்  வருமானம் ஈட்டிக்கொள்ள முடியும் என்பதைப் பற்றியும் எதிர்பார்த்திருக்கவில்லை .

குறைந்த வருமானம் கொண்ட   ஒரு இலட்சம் குடும்பங்களது  வீட்டுக் கூறைகளின் சூரிய சக்தியை பெற்றுக்கொள்வதற்கான கருவிகளை பொருத்தி,  தலா  5 மெகா வொட் மூலமாக 5 இலட்சம் சூரிய சக்தியை உற்பத்தி செய்வதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

இந்த திட்டத்தின் கீழ்  15 ஆண்டுகளுக்கு  2,500   ரூபாவும், 15 - 22  ஆண்டுகளுக்கு 7,000 ரூபாவும் வழங்க தீர்மானித்துள்ளோம் " என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04