மதுருகம பகுதியிலிருந்து புத்தளத்திற்கு அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக தேக்கு மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற லொறியை பொலிஸார் சுற்றிவளைதுள்ளனர்.  

புத்தளம் பொலிஸாருக்குக் கிடைக்பெற்ற தகவலுக்கமைய நேற்று இரவு செம்மந்தழுவ பகுதியில் லொறியை மறித்து சோதனை நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டபோது அனுமதிப் பத்திரமின்றி கொண்டு செல்ல முற்பட்ட ஒருத் தொகை தேக்க மரக்குற்றியுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவர் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள், தேக்கு மரக்குற்றிகள், லொறி ஆகியவற்றை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

மேலதிக விசாரணைகளைப் புத்தளம் பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.