(என்.வீ.ஏ.)
மும்பை ப்றேபோன் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற மிகவும் பரபரப்பான ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியின் கடைசிக் கட்டத்தில் நடப்பு சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸை அதிர வைத்த லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் 6 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது.
சென்னை சுப்பர் கிங்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 211 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் அணி, குவின்டன் டி கொக், எல்வின் லூயிஸ் ஆகிய இருவரின் அதிரடி அரைச் சதகங்களின் உதவியுடன் 19.3 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 211 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
இதற்கு அமைய இதுவரை நடந்து முடிந்த ஏழு போட்டிகளில் 6இல் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடிய அணி வெற்றி பெற்றுள்ளது.
அத்துடன் அறிமுக அணிகளில் ஒன்றான லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும்.
ஆரம்ப வீரர்களான கே. எல். ராகுல், குவின்டன் டி கொக் ஆகிய இருவரும் 62 பந்துகளில் 99 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த தொடக்கத்தை இட்டுக் கொடுத்தேன்.
ராகுல் ட்ராவிட் (40) ஆட்டமிழந்த சொற்ப நேரத்தில் மனிஷ் பாண்டே (5) குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினார்.
தொடர்ந்து குவின்டன் டி கொக் (61), தீபக் ஹுடா (13) ஆகியோரும் ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து 16 பந்துகளில் வெற்றிக்கு மேலும் 40 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
எல்வின் லூயிஸ், அயுஷ் படோனி ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 13 பந்துகளில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்து லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸின் வெற்றியை உறுதிசெய்தனர்.
23 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்ட லூயிஸ் 6 பவுண்ட்றிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்களையும் படோனி 9 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 19 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ட்வேன் ப்ரிட்டோரியஸ் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட சென்னை சுப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 210 ஓட்டங்களைக் குவித்தது.
ஆரம்ப விக்கெட்டில் 28 ஓட்டங்களை ரொபின் உத்தப்பாவுடன் பகிர்ந்த ருத்துராஜ் கய்க்வாட் ஒரு ஓட்டத்தை மாத்திரம் பெற்று ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து உத்தப்பா (50), மொயீன் அலி (35) ஆகிய இருவரும் 30 பந்துகளில் 56 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினர்.
அவர்கள் இருவரும் 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்த பின்னர் 4ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த ஷிவம் டுபே (49), அம்பாட்டி ராயுடு (27) ஆகிய இருவரும் 60 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு மேலும் பலம் சேர்த்தனர்.
அணித் தலைவர் ரவிந்த்ர ஜடேஜா 17 ஓட்டங்களையும் எம்.எஸ். தோனி ஆட்டமிழக்காமல் 16 ஓட்டங்களையும் பெற்றனர்.
லக்னோ சுப்பர் ஜயன்ட் பந்துவீச்சில் ரவி பிஷோனி 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஆவேஷ் கான் 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அண்ட்றூ டய் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM