திட்டமிடப்பட்ட அடிப்படைவாதிகளால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு : ஜனாதிபதி ஊடகப்பிரிவு

01 Apr, 2022 | 07:40 AM
image

நுகேகொடையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் திட்டமிடப்பட்ட அடிப்படைவாதிகளால் மேற்கொள்ளப்பட்டது என்பது தெரியவந்துள்ளது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நுகேகொட ஜூபிலி தூண் பகுதிக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினருக்கு இடையில் ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படைவாதிகள் குழுவொன்று வன்முறைச் சூழலை ஏற்படுத்தியமை தெரியவந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

இரும்புக் ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளுடன் ஆயுதம் ஏந்திய குழுவினர், ஆர்ப்பாட்டக்காரர்களைத் தூண்டிவிட்டு, மிரிஹான பங்கிரிவத்தையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்று கலவரத்தை ஏற்படுத்தியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறையில் ஈடுபட்டவர்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படைவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் அரபு வசந்தத்தை உருவாக்குவோம் என கோசமிட்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கலவரக்காரர்கள் திட்டமிட்ட வகையில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மக்களைத் தூண்டிவிட்டு நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்தியுள்ளமை கைது செய்யப்பட்ட நபர்கள் மூலம் தெரியவந்துள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு செல்லும் நுகேகொட, மிரிஹான – பெங்கிரிவத்தை பகுதியில் நேற்று வியாழக்கிழமை (31) இரவு 7.30 மணியளவில் பொது மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.

நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு கோரியும் குறித்த பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காணுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டத்தை நள்ளிரவு வரை தொடர்ந்த நிலையில், ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த கலகமடக்கும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டனர்.

இதன்பின்னர், இன்று அதிகாலை 12.45 மணிக்கு உடன் அமுலாகும் வகையில் கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு, நுகேகொட, களனி மற்றும் கல்கிசை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில் குறித்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை 5 மணியுடன் தளர்த்தப்பட்டது.

இந்நிலையில் மிரிஹான பகுதியில் ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பொலிஸ், இராணுவம், விசேட அதிரடிப்படையினர் தொடர்ந்தும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்தே நுகேகொடையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் திட்டமிடப்பட்ட அடிப்படைவாதிகளால் மேற்கொள்ளப்பட்டது என்பது தெரியவந்துள்ளது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகளுக்கு 

https://www.virakesari.lk/article/125082

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில்...

2025-03-27 12:03:15
news-image

விமான எதிர்ப்பு தோட்டாக்களுடன் இராணுவ வீரர்...

2025-03-27 11:37:26
news-image

கற்களை ஏற்றிச் சென்ற பாரஊர்தி விபத்து

2025-03-27 12:02:05
news-image

கடற்சார் பொருளாதாரம் ஊடாக நாட்டுக்கு நன்மைகளை...

2025-03-27 11:54:43
news-image

பாணந்துறை - இரத்தினபுரி வீதியில் திடீரென...

2025-03-27 11:26:19
news-image

மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு...

2025-03-27 11:23:40
news-image

மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக குருணாகலுக்கு பீடி...

2025-03-27 11:23:14
news-image

இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகள் தாய்நாட்டில்...

2025-03-27 11:03:55
news-image

அம்பாறை ஒலுவில் துறைமுகத்தின் செயற்பாடுகளை மீள...

2025-03-27 11:03:31
news-image

கிரிஷ் கட்டிட வழக்கு விசாரணைகளிலிருந்து விலகுகிறேன்...

2025-03-27 10:55:22
news-image

நாட்டில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்...

2025-03-27 10:46:51
news-image

முச்சக்கர வண்டிகளை செலுத்தும் வெளிநாட்டவர்களால் வீதி...

2025-03-27 10:33:06