தென் ஆபிரிக்காவை வெளியேற்றி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இங்கிலாந்து

Published By: Digital Desk 4

31 Mar, 2022 | 10:55 PM
image

(என்.வீ.ஏ.)

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக கிறைஸ்ட்சேர்ச், ஹெக்லி ஓவல் விளையாட்டரங்கில் இன்று (31) நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கிண்ண இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் 137 ஓட்டங்களால் இங்கிலாந்து அமோக வெற்றியீட்டியது.

இதன் மூலம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இதே அரங்கில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் முன்னாள் சம்பியன் அவுஸ்திரேலியாவை சந்திக்கவுள்ள இங்கிலாந்து, சம்பியன் பட்டத்தை தக்கவைக்க கடுமையாக முயற்சிக்கவேண்டிவரும்.

தென் ஆபிரிக்காவுடனான அரை இறுதிப் போட்டியில் டெனியெல் நிக்கலி வைட் குவித்த 129 ஓட்டங்கள், சொவியா டன்க்லி பெற்ற 60 ஓட்டங்கள், மகளிர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சொவி எக்லஸ்டோன் பதிவு செய்த அவரது தனிப்பட்ட அதிசிறந்த பந்துவீச்சு பெறுதி என்பன இங்கிலாந்தின் இலகுவான வெற்றிக்கு வழிவகுத்தன.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இங்கிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 293 ஓட்டங்களைக் குவித்தது.

இங்கிலாந்து துடுப்பாட்டத்தில் டெமி போமன்ட் (7), அணித் தலைவி ஹீதர் நைட் (1), நெட் சிவர் (15), அமி ஜோன்ஸ் (28) ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

26ஆவது ஓவரில் இங்கிலாந்து 4 விக்கெட்களை இழந்து 126 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இந் நிலையில் 5ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த டெனியெல் வைட், சொவியா டன்க்லி ஆகிய இருவரும் பெறுமதிக்க 116 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்தின் மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்துக்கொடுத்தனர்.

டெனியெல் வைட் 125 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்ட்றிகளுடன் 129 ஓட்டங்களைக் குவித்தார். மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவர் பெற்ற முதலாவது சதம் இதுவாகும்.

வைட்டுக்கு பக்கபலமாக பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிய டன்க்லி 72 பந்துகளில் 4 பவுண்ட்றிகளுடன் 60 ஓட்டங்களைப் பெற்றார்.

கெத்தரின் ப்ரன்ட் 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, சொவி எக்லஸ்டோன் 11 பந்துகளில் 5 பவுண்ட்றிகளுடன் 24 ஓட்டங்களைப் பெற்றார்.

தென் ஆபிரிக்க பந்துவீச்சில் ஷப்னிம் இஸ்மாயில் 46 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மாரிஸ்ஆன் கெப் 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மசாபட்டா க்ளாஸ் 55 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் விழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா, எதிரணியினரின் பந்துவீச்சுகளை எதிர்கொள்வதில் சிரமத்தை எதிர்கொண்டு 38 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 156 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்து உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறியது.

ஆரம்ப வீராங்கனைகளான லோரா வுல்வார்ட் (0), லிஸெல் லீ (2) ஆகிய இருவரையும் 4 ஓவர்களுக்குள் இழந்த தென் ஆபிரிக்கா பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது.

அடுத்த துடுப்பாட்ட வீராங்கனைகள் நால்வர் 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றபோதிலும் பெரிய எண்ணிக்கைகளைப் பெறத் தவறியமை அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

லாரா குடோல் (28), அணித் தலைவி சுனே லுஸ் (21), மினோன் டு ப்ரீஸ் (30), மாரிஸ்ஆன் கெப் (21) ஆகிய பிரதான துடுப்பாட்ட வீராங்கனைகளே பெரிய எண்ணிக்கைகளைப் பெறத் தவறியவர்களாவர்.

இவர்களை விட ட்ரிஷா செட்டி (21), ஷப்னிம் இஸ்மாயில் (12) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

இங்கிலாந்து பந்துவீச்சில் சொவி எக்லஸ்டோன் 36 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35