(எம்.மனோசித்ரா)
நாடளாவிய ரீதியில் சில வலயங்களில் 11 மணித்தியாலங்களும் , மேலும் சில வலயங்களில் 13 மணித்தியாலங்களும் நாளைய தினமும் மின் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
G,H,I,J,K,L
அதற்கமைய இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை அதிகாலை 3 மணிவரை 3 மணித்தியாலங்களும் , காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 4 மணித்தியாலங்களும் , மாலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை 4 மணித்தியாலங்களும் என 11 மணித்தியாலங்கள் G,H,I,J,K,L ஆகிய வலயங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.
A,B,C,D,E,F
இதே வேளை அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை 3 மணித்தியாலங்களும் , நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை 4 மணித்தியாலங்களும் , மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை என 13 மணித்தியாலங்கள் A,B,C,D,E,F வலயங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.
T,U,V,W
நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை 3 மணித்தியாலங்களும் , காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 4 மணித்தியாலங்களும் , மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை 6 மணித்தியாலங்களும் என 11 மணித்தியாலங்கள் T,U,V,W வலயங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.
P,Q,R,S
அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை 3 மணித்தியாலங்களும் , நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை 4 மணித்தியாலங்களும் , மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 6 மணித்தியாலங்களும் என 11 மணித்தியாலங்கள் P,Q,R,S வலயங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.
M,N,O,X,Y,Z
காலை 5.30 முதல் காலை 9 மணி வரையும் , மாலை 4 மணி முதல் மாலை 6 மணிவரையும் 5 மணித்தியாலங்களும் 30 நிமிடமும் M,N,O,X,Y,Z வலயங்களிலும் , CC1 வயலத்தில் காலை 6 மணி முதல் முற்பகல் 9.30 மணி வரை 3 மணித்தியாலங்களும் 30 நிமிடமும் மின் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM