சிறுமி, பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி சட்ட விரோத பணம் சம்பாதிப்பு :பிரதான சந்தேகநபரான தரகருக்கு பிணை

Published By: Digital Desk 4

31 Mar, 2022 | 10:58 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கல்கிஸை பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் உட்பட பல பெண்களை , பணத்துக்காக ஆடவர்களுக்கு விற்பனை செய்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி குறுகிய காலத்திற்குள் சுமார் 4 கோடி ரூபா வரை சம்பாதித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதான தரகர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

100 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீர பிணைகளில் அவரை விடுவிக்க கொழும்பு பதில் பிரதான நீதிவான் சந்திம லியனகே இன்று உத்தரவிட்டார்.வாதுவ பகுதியை சேர்ந்த விதானகே ரஜுவ் ரவிநாத் ஜயசிங்க எனும் தரகரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டவராவார்.

இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சட்ட விரோத சொத்துக்கள் தொடர்பிலான விசாரணை பிரிவு விசாரணைகளை முன்னெடுக்கும் நிலையில் இன்று நீதிமன்றிற்கு அறிக்கை சமர்த்திருந்தது. அதன்படி தொடர்ச்சியாக குறித்த விடயம் தொடர்பில் கறுப்பு பண சுத்திரிகரிப்பு சட்டத்தின் கீழ் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சி.ஐ.டி அதிகாரிகள் நீதிமன்றிற்கு தெரிவித்தனர்.

முன்னதாக கடந்த 2021  ஜூன் 7 ஆம் திகதி கல்கிசை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் 14 வயதான சிறுமியை இனையத்தில் விற்பனை செய்தமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்தே இந்த விவகார விசாரணைகள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் உத்தரவில் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திடம் கையளிக்கப்பட்டது.  

இந் நிலையில் குறித்த விவகாரம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்தியட்சர் தர்ஷிகா குமாரியின் நேரடி கட்டுப்பாட்டில், அவரது ஆலோசனைக்கு அமைய  சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் மனோஜ் சமரநாயக்க,  தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இவ்விசாரணைகளுக்கு சி.ஐ.டி.யின் டிஜிட்டல் பகுப்பாய்வு பிரிவூடாக விசாரணைக்கு அவசியமான உதவிகள் செய்யப்பட்டன. இந்த வழக்கு தொடர்பில் சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கபட்டிருந்த நிலையிலேயே சட்டவிரோதமாக சொத்து சேர்த்தமை தொடர்பில் மற்றொரு வழக்கு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் தொடரப்பட்டு அவ்வழக்கிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் இன்று அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

கடந்த 2006ஆம் ஆண்டு முதல் சந்தேக நபர் எட்டு வங்கி கணக்குகள் ஊடாக 4 கோடியே 56 இலட்சத்து 81ஆயிரத்து 908 ரூபா பணம் பரிமாற்றம் செய்யபட்டுள்ளதாகவும்,வேறு நபர்களின் பெயரின் கீழ் வாகனங்கள் பலவும் சந்தேக நபரால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் சி.ஐ.டி விசாரணைகளில் தெரிய வந்தாக நீதிமன்றிற்கு அறிக்கையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டர்ல் மாத்திரமே...

2024-03-29 12:20:15
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30