(இராஜதுரை ஹஷான்)
இலங்கை மின்சார சபையின் மின்னுற்பத்தி நடவடிக்கைகளுக்கு தேவையான 6 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசலை வழங்க லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.
மின்னுற்பத்தி நிலையங்களுக்கு தேவையான டீசல் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்பட்டதை தொடர்ந்து இலங்கை மின்சார சபை கடந்தவாரம் லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்திடமிருந்து 6 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசலை கோரியிருந்தது.
எரிபொருள் பற்றாக்குறை மற்றும் வரட்சியான காலநிலையினால் நீர்மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டிருத்தல் உள்ளிட்ட காரணிகளினால் நாட்டில் முதன் முறையாக இன்றைய தினம் 13 மணித்தியாலங்கள் நாடுதழுவிய ரீதியில் சுழற்சி முறையில் மின்விநியோகம் தடைப்பட்டது.
இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கமைய 6000 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசலை வழங்க ஐ.ஓ.சி. நிறுவனம் இன்றைய தினம் இணக்கம் தெரிவித்தது.இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஊடாக டீசல் தொகை மின்சார சபைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM