நாட்டில் அமுல்படுத்தப்பட்ட மின் வெட்டு நாளை முதல் வழமைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என மின்சாரச்சபை  தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட பாதிப்பினால் தற்போது நாளாந்தம் ஒன்றரை மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பாதிப்பு ஏற்பட்டிருந்த மின்பிறப்பாக்கி நாளை முதல் இயங்க ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.