பதுளை பகுதியைச் சேர்ந்த யுவதியொருவர் நுவரெலியா – ராகலை பகுதிக்கு சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
அவர் தனது சகோதரியின் வீட்டிற்கு சென்ற நிலையிலேயே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 07ஆம் திகதி காலை முதல் அவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
20 வயதான கணேசமூர்த்தி காயத்திரி (நித்யா) என்ற யுவதியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக அவரது சகோதரியான கணேஷமூர்த்தி துர்கா தெரிவித்தார்.
குறித்த யுவதி காணாமல் போன சம்பவம் தொடர்பில் ராகலை பொலிஸ் நிலையத்தில் கடந்த 7ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும், இதுவரை பொலிஸார் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என அவரது சகோதரி கூறுகின்றார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக ராகலை பொலிஸார் தெரிவிக்கின்ற நிலையில், கணேசமூர்த்தி காயத்திரி தொடர்பான தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில், 0776320266 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து அறிவிக்குமாறு அவரது உறவினர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM