வவுனியாவில் காணாமல் போன இளைஞன் தொடர்பான விசாரணைகள் முன்னெடுப்பு

Published By: Digital Desk 4

31 Mar, 2022 | 03:17 PM
image

வவுனியாவில் கடந்த ஜனவரி 27 ஆம் திகதி முதல் காணாமல்போன இளைஞன் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இச்சம்பவம் தொடர்பாக சில சந்தேக நபர்கள் மற்றும் அவரது நண்பர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர் .

No description available.

ஜனவரி மாதம் 27 ஆம் திகதி வவுனியா குருமன்காட்டிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்கு சென்ற பாலகிருஷ்ணன் நிரேஸ் என்ற இளைஞன் காணாமல் போயுள்ளதாக அவரது தாயரால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது . இதன் விசாரணைகள் மந்த கதியில் இடம்பெற்று வருவதாகவும் இதன் உண்மைத் தகவல்களை காணாமல் போன இளைஞனின் தாயார் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களின் முன் தோன்றி கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

அவரது கருத்துக்கள் குறித்து பொலிசாரிடம் வினவியபோது ,

குறித்த வர்த்தக நிலையத்திற்கு முன்பாக இளைஞன் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த காட்சிகள் சி.சி.ரிவி காணொளியில் தெரிவாகின்றது. எனினும் குறித்த வர்த்தக நிலையத்திற்குள் . சென்றமை காணப்படவில்லை . அப்படியே வெளியே சென்றதையே காணமுடிகின்றது . அது தொடர்பாக தொடர்ந்தும் ஆராயப்பட்டு வருகின்றது. 

அவரது நண்பர்கள் மற்றும் சந்தேக நபர்கள் சிலரிடம் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது . அவரது தொலைபேசி இலக்கம் மற்றும் அடையாள அட்டை இலக்கம் என்பன கண்காணிக்கப்பட்டு வருகின்றன . இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக மேலும் தெரிவித்துள்ளனர் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56