கொங்கோ நாட்டில் ஐ.நா. அமைதிப்படையின் ஹெலிக்கொப்டர் விழுந்து விபத்திற்குள்ளானதில் 6 பாகிஸ்தான் வீரர்கள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில் கிளர்ச்சி படைகளுக்கும், அந்த நாட்டு இராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது.
இதன் காரணமாக அங்கு அமைதி காக்கும் பணிகளில் ஐ.நா. அமைதிப்படை ஈடுபட்டுள்ளது.
ஐ.நா.வின் இந்த அமைதிப்படையில் பாகிஸ்தான் இராணுவமும் இடம்பெற்றுள்ளது, இதற்காக பாகிஸ்தான் இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பலர் அங்கு முகாமிட்டுள்ளனர்.
இந்நிலையில் கொங்கோவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள வடக்கு கிவு மாகாணத்தில் இருந்து, நேற்று முன்தினம் மாலை பாகிஸ்தான் இராணுவ ஹெலிக்கொப்டர் ஒன்று வழக்கமான ரோந்து பணிக்காக புறப்பட்டு சென்றது.
ஹெலிக்கொப்டரில் 6 பாகிஸ்தான் வீரர்கள் உட்பட ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் 8 பேர் இருந்தனர், புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் அந்த ஹெலிக்கொப்டர் திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் ஹெலிக்கொப்டரில் இருந்த 8 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில், இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ஐ.நா. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹெலிக்கொப்டர் விழுந்து நொறுங்கிய பகுதி கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் மிக்க பகுதி என்பதால், ஹெலிக்கொப்டரை கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM