களுத்துறை  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் போக்குவரத்து அமைச்சருமான  குமார வெல்கமவின் மத்துகம வெலிங்டன் தோட்டத்தில் இன்று பாரிய தேடுதல் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து காணாமல் போனதாக கூறப்படும் குண்டு துளைக்காத வாகனங்கள் மற்றும் டிபெண்டர் வண்டிகளை தேடியுமே தேடுதல் நடத்தப்பட்டது.

பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தரவுக்கு கிடைக்கப்பெற்ற முறைபாட்டுக்கு அமைவாகவே பொலிஸ் விசேட விசாரணை பிரிவினர் இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக பொலிஸ் தலைமையகத்தின் உயரதிகாரியோருவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் குறித்த தேடுதல் நடவடிக்கையின் போது வாகனங்களை கண்டுபிடிக்க முடியவில்லையென அவர் மேலும் தெரிவித்தார்.