(எம்.மனோசித்ரா)
மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நான்கு கைதிகள் அறநெறி கல்வி இறுதி பரீட்சையில் விசேட சித்தி பெற்றுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெறவிருந்த குறித்த பரீட்சைகள் கடந்த ஆண்டு நடத்தப்பட்டதோடு, சிறைச்சாலை திணைக்களம் மற்றும் பரீட்சைகள் திணைக்களம் என்பவற்றின் தலையீட்டில் வெலிக்கடை சிறைச்சாலையில் 7 கைதிகள் பரீட்சைக்கு தோற்ற அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வளித்தல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சிறை கைதிகளுக்காக உயர் கல்வியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில் ஞாயிறு தினங்களில் இடம்பெறும் அறநெறிக் கல்வி முக்கியத்துவமுடையது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ள இந்நபர்களை நல்ஒழுக்கம், இறையச்சம், சமூக நட்புறவு கொண்டவர்களாக மாற்றுவதும், அவர்களுக்கு உயர்கல்வியை (பட்டப்படிப்பு வரை) கற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து சமூகத்திற்கு பொருத்தமுள்ளவர்களாக மாற்றுவதுமே இந்தச் செயலணியின் பிரதான நோக்கமாகும் என சிறைச்சாலை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM