வனிந்து அபார பந்து வீச்சு ! கொல்கத்தா நைட் ரைடர்ஸை வெற்றது றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் 

31 Mar, 2022 | 09:58 AM
image

(என்.வீ.ஏ.)

மும்பை, டொக்டர் டி.வை. பட்டில் விளையாட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் கடும் சவாலை எதிர்கொண்ட றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் 3 விக்கெட்களால் பரபரப்பான வெற்றியை ஈட்டியது.

தனது ஆரம்பப் போட்டியில் 205 ஓட்டங்களைக் குவித்தும் பஞ்சாப் கிங்ஸிடம் கடைசி ஓவரில் தோல்வி அடைந்த றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர், நேற்றைய போட்டியில் எதிரணியை 128 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தியும் பெரும் சிரமத்துக்கு மத்தியிலேயே வெற்றிபெற்றது.

இப் போட்டியில் இரண்டு அணிகளும் பவர் ப்ளேயில் தலா 3 விக்கெட்களை இழந்து பெரும் நெருக்கடியை எதிர்கொண்டன.

எவ்வாறாயினும் துடுப்பாட்ட வரிசையில் 7ஆம் இலக்க வீரராக ஆடுகளம் நுழைந்த தினேஷ் கார்த்திக், தனது முன்னாள் சக அணி வீரர் அண்ட்றே ரசலின் பந்துவீச்சில் பெங்களூரின் வெற்றிக்கு தேவையான ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

வலது தோற்பட்டையில் ஏற்பட்ட உபாதைக்கு மத்தியிலேயே அண்ட்ரே ரசல் கடைசி ஓவரை வீசினார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 18.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றது.

எட்டு துடுப்பாட்ட வீரர்கள் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றபோதிலும் அவர்களில் அண்ட்ரே ரசல் (25), உமேஷ் யாதவ் (18) ஆகிய இருவரே 15 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் பந்துவீச்சில் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்க டி சில்வா 4 ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஆகாஷ் தீப் 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஹர்ஷால் பட்டேல் 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

129 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர், 19.2 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

டிம் சௌதீ, உமேஷ் யாதவ் ஆகியோரின் வேகப்பந்துவீச்சுகளில் முதல் 3 விக்கெட்களை 17 ஓட்டங்களுக்கு பெங்களூர் இழந்தபோதிலும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி குறைந்த மொத்த எண்ணிக்கையைக் கடந்து வெற்றியீட்டியது.

பவ் டு ப்ளெசிஸ் (5), அனுஜ் ராவத் (0), விராத் கோஹ்லி (12), டேவிட் வில்லி (18) ஆகிய நால்வரும் களம் விட்டகன்றிருந்தபோது பெங்களூரின் மொத்த எண்ணிக்கை 11 ஓவர்களில் 62 ஓட்டங்களாக இருந்தது.

எனினும் ஷேர்பேன் ரதர்போர்ட் (28), ஷாபாஸ் அஹமத் (27), தினேஷ் கார்த்திக் (14 ஆ.இ.), ஹர்ஷால் பட்டேல் (10 ஆ.இ.) ஆகியோர் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி பெங்களூர் அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.

பந்துவீச்சில் அசத்திய வனிந்து ஹசரங்க டி சில்வா துடுப்பாட்டத்தில் 4 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார்.

கொல்கத்தா பந்துவீச்சில் டிம் சௌதீ 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் உமேஷ் யாதவ் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகனாக வனிந்து ஹசரங்க தெரிவானார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35