(ந.ஜெகதீஸ்)

நல்லாட்சியில் தாபிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் சுயாதீனமாக இயங்குகின்றது என தம்பட்டம் அடித்தவர்களுக்கு அவ்வாணைக்குழுக்கள் வெறும் அரசியல் தேவைப்பாடுகளுக்கே இயங்கியுள்ளதென்பதை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் இராஜினாமா கடிதத்தின் மூலம் விளங்கி கொள்ள முடியும் என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் மொஹமட் முசமில் தெரிவித்துள்ளார்.

கோட்டேயில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னனியின் தலைமையகத்தில் இன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உறையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் 

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த காலம் முதல்  நல்லாட்சி அரசாங்கத்தில் தாபிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் அணைத்தும் சுயாதினமாக இயங்குகின்றது என மக்கள் விடுதலை முன்னனியின் விஜித ஹேரத் உட்பட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பலர் தம்பட்டம் அடித்தனர்.எனினும் தற்போது இலஞ்ச ஊழல் அணைக்குழுவினது பணிப்பாளர் நாயகத்தின் பதவி விலகலுடன்  அவ்வென்னம் பொய்த்து விட்டது.  அதனை தொடர்ந்தும் அவர்களால் நடைமுறைப்படுத்தமுடியாமல் போய்விட்டது.

பொதுவாக ஆணைக்குழுக்குளை தலைவரும் ஆணையாளர்களுமே வழமையாக நிர்வகிப்பர்.ஆனால் இவ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு மாத்திரம் விசேட அமைச்சவை பத்திரம் தயாரிக்கப்பட்டு பாரமன்றத்திலும் விவாதத்திற்கு எடுத்துகொள்ளபட்டது. மேலும் அதிகாரங்களும் மேலதிகமாக குறித்த ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ மற்றும் முப்படைகளின் தளபதிகளுக்கு எதிரான வழக்கினை புதுக்கடை நீதவான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது குறித்த ஆனைக்குழுவின் ஆணையாளரினால் கையெழுத்து இடப்பட்டிருக்கவில்லை. அவ்வாறெனின் குறித்த ஆணைக்குழு எவ்வாறு சுயாதீனமாக இயங்க முடியும்.

மேலும் பொலிஸ் ஆணைக்குழு மற்றும் அதனோடு இயங்கும் எப்.சி.ஐ.டி இலங்ச  ஊழலை கண்காணிக்கும் பாராமன்றத்தில் இயங்கும் விசேட ஆணைக்குழுக்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டு இயங்குகின்றன. இவைகளது சேவைகளில் பொறுப்பு கூற வேண்டியது பொலிஸ் மா அதிபரா? அல்லது ஆணையாளரா?   எனும் போது சிக்கல் ஏற்படும் வாய்ப்புள்ளது என்றார்.