4 ஆண்டுகளாக மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் : சரணடைந்த ஆசிரியைக்குப் பிணை 

Published By: Digital Desk 4

30 Mar, 2022 | 10:09 PM
image

(எம்.எப்.எம் பஸீர்)

நான்கு வருடங்களாக பாடசாலை மாணவனொருவரை பாலியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பிரபல பாடசாலையொன்றின் கணினி ஆசிரியைக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில்,  அவர் இன்று நீதிமன்றில் சரணடைந்தார். 

தனது சட்டத்தரணிகள் ஊடாக சரணடைந்த 34 வயதான குறித்த ஆசிரியையை பிணையில் செல்ல கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று ( 30) அனுமதியளித்தது. 

10 இலட்சம் ரூபா பெறுமதியான  சரீரப் பிணையில் செல்ல, கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம,  வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு உத்தரவிட்டார்.

 அத்துடன் இந்த துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில், பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர்  பணியகத்தில்  ஆஜராகி வாக்கு மூலம் வழங்குமாறு குறித்த ஆசிரியைக்கு நீதிவான் உத்தரவிட்டார்.

இதனைவிட, சம்பவம் தொடர்பில் பூரண விசாரணைகளை முன்னெடுக்க சிறுவர் மற்றும் மகளிர் விசாரணைப் பணியகத்துக்கு உத்தர்விட்ட நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம,  அந்த விசாரணைகளின் பூரண அறிக்கையை சட்ட மா அதிபருக்கு அனுப்பி, அடுத்த கட்ட சட்ட நடவடிக்கை தொடர்பில் ஆலோசனைப் பெற்றுக்கொள்ளுமாறு  குறிப்பிட்டார்.

சட்ட மா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொண்ட பின்னர், இவ்வழக்கு தொடர்பில்  தற்போது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள ஆசிரியைக்கு நீதிமன்றம் அறிவித்தல் அனுப்பினால் மட்டும் மன்றில் ஆஜராவது போதுமானது என நீதிவான்  அறிவித்தார்.

இந்த விவகாரத்தில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம்  கடந்த 10 ஆம் திகதி பொலிசாருக்கு உத்தரவிட்டிருந்தது.

20வயதுடைய இளைஞர்  மாணவராக இருந்த போது சந்தேக நபரான ஆசிரியையை கிரிக்கெட் சமர் (பிட்மெச்) ஒன்றின் போது  அவரை சந்தித்துள்ளார்.

அதன்பின்னர் அவரை 60 தடவைகள் கல்கிஸ்சை பகுதியில் உள்ள ஹோட்டலொன்றுக்கு இந்த ஆசிரியை அழைத்துச்சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளமை தொடர்பிலும் பாடசாலைக்குள்ளே நடந்த துஷ்பிரயோகங்கள்  தொடர்பிலும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் துஸ்பிரயோக தடுப்பு பிரிவு அதிகாரிகள் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இந்நிலையில் அதுகுறித்து விசாரணைகளை முன்னெடுத்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், குறித்த ஆசிரியை முன் பிணை கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். 

முன் பிணை தொடர்பில் நேற்று ( 29) கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம முன்னிலையில் வாதங்கள் முன் வைக்கப்பட்ட நிலையில்,  ஆசிரியையை சந்தேக நபராக கருதி தேடி வருவதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றுக்கு அறிவித்திருந்தனர்.

 இந் நிலையிலேயே அவர் இன்று (30) தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37