நாட்டில் நாளை நீண்ட நேர மின் துண்டிப்பு

By T Yuwaraj

30 Mar, 2022 | 07:30 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாடுதழுவிய ரீதியில் நாளை வியாழக்கிழமை சுழற்சி முறையில் 13 மணித்தியாலங்கள் மின்விநியோக தடையை அமுல்படுத்த இலங்கை பொதுபயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

நாளையும் 21/2 மணிநேர மின் துண்டிப்பு - இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு |  Virakesari.lk

மின்னுற்பத்தி நிலையங்களின் மின்னுற்பத்தி நடவடிக்கைகளுக்கு தேவையான எரிபொருள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம்,வரட்சியான காலநிலை உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு 13 மணித்தியாலங்கள் மின்விநியோக தடையினை அமுல்படுத்த இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கமைய இலங்கை பொதுபயன்பாட்டு ஆணைக்குழு 13 மணித்தியால மின்விநியோக தடைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

நாளை முதல் 15 மணித்தியாலங்கள் மின்விநியோக தடையை அமுல்படுத்தும் சாத்தியம் அதிகம் காணப்படுவதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

எரிபொருள் பற்றாக்குறைக்கு விரைவான தீர்வு காணவும்,மின்சாரத்தை சிக்கனமாக பாவிப்பதற்கு உள்ளுராட்சிமன்றங்கள் மட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு முன்வைத்த யோசனைகளையும் உரிய தரப்பினர் செயற்படுத்தவில்லை.

எரிபொருள் பற்றாக்குறை தீவிரமடைந்துள்ள நிலைமையில்,வரட்சியான காலநிலை தொடர்வதால் நீர்மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் இலங்கை மின்சார சபை மின்விநியோக தடையை அமுல்படுத்த தொடர்ச்சியாக முன்வைத்த கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டே மின்விநியோக தடை அமுலுக்கு அனுமதி வழங்கியுள்ளோம் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிங்கள- தமிழ் இனக்கலவரம் மீண்டும் தோற்றம்...

2023-02-01 18:45:41
news-image

இலங்கை வழமைக்கு திரும்ப அமெரிக்கா தொடர்ந்தும்...

2023-02-01 18:43:08
news-image

மக்களை வஞ்சிக்காத சபையை நாம் அமைப்போம்...

2023-02-01 18:42:09
news-image

யானையின் வாலைப் பிடித்து சொர்க்கம் செல்ல...

2023-02-01 18:41:11
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தை சீர்திருத்தும் நடவடிக்கைகளை தொடர்ந்து...

2023-02-01 17:33:03
news-image

இலங்கை ஜனநாயகம் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கான தருணம்...

2023-02-01 17:03:46
news-image

ஊடகவியலாளர் நிபோஜனின் உடலம் இறுதி அஞ்சலியுடன்...

2023-02-01 18:38:05
news-image

சமூக அமைதியின்மை நிலவிய காலங்களில் அரசாங்கம்...

2023-02-01 16:44:53
news-image

எல்பிட்டிய பிரதேச வீடு ஒன்றிலிருந்து இரு...

2023-02-01 16:39:04
news-image

வைத்தியசாலையில் சிகிச்சைபெறும் மனைவியை பார்க்க  தாயுடன்...

2023-02-01 16:14:37
news-image

சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பேராயர் உட்பட...

2023-02-01 16:26:18
news-image

நிலாவரையில் தவிசாளருக்கு எதிரான தொல்லியல் திணைக்கள...

2023-02-01 15:44:52